fbpx

1ஆம் வகுப்பில் சேர மத்திய அரசு விதித்த வயது என்ன.? மாநில அரசுகளுக்கு இடையே தொடரும் விவாதம்.!

இந்தியா பல மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் கொண்ட ஒரு ஜனநாயக நாடாகும் . மேலும் இந்தியாவில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு என தனித்தனி உரிமைகளும் இருக்கின்றன. சில மாநில அரசுகளின் உரிமைகளில் மத்திய அரசு தலையிட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மார்ச் 2022 ஆம் ஆண்டின் நிலவரப்படி ஒன்றாம் வகுப்பு சேர்வதற்கான வயது வரம்பு மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபட்டு இருக்கிறது. இந்தியாவின் 14 மாநிலங்களிலும் ஆர் யூனியன் பிரதேசங்களிலும் ஐந்து வயதைக் கடந்தாலே ஒன்றாம் வகுப்பில் சேரலாம் என கல்விக் கொள்கை இருக்கிறது.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் படி மாநிலங்களுக்கிடையே ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வயதை நிர்ணயிக்கும் படி மத்திய அரசு கடிதம் எழுதி இருக்கிறது. டெல்லியில் இந்த வருடம் முதல் 6 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளையும் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே தொடர்ந்து விவாதங்களும் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின்படி 3-8 வயதிற்குட்பட்டவர்கள் அடிப்படை கல்விக்கு தகுதியானவர்கள் என்றும் 8-11 வயது வரை ஆயத்து நிலை கல்வி என்றும் 11-14 வயது வரை இடைநிலை கல்வி என்றும் 14-18 வயது வரை உயர்கல்வி நிலை என்றும் வகைப்படுத்தி இருக்கிறது. மேலும் ஒன்றாம் வகுப்பில் சேர்வதற்கு ஆறு வயது கட்டாயம் பூர்த்தி செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்பதும் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் உள்ளது.

Kathir

Next Post

தனிநபர் கடன்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்கியது ரிசர்வ் வங்கி..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Fri Nov 17 , 2023
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கும் பாதுகாப்பற்ற தனிநபர் கடன்களுக்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி மேலும் அதிகரித்து உள்ளது. இதைத் தொடர்ந்து, தனிநபர் கடன்களுக்கான ‘ரிஸ்க் வெயிட்டேஜ்’ 25% புள்ளிகள் உயர்த்தப்பட்டு, 125% புள்ளிகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் வீடு, கல்வி, வாகனம், தங்கம் மற்றும் தங்க நகைகளுக்கான கடன்கள், தொடர்ந்து 100% ரிஸ்க் வெயிட்டேஜ் கொண்டதாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக ரிஸ்க் வெயிட்டேஜ் விதிக்கப்பட்டால், […]

You May Like