fbpx

பெண்களே..!! உங்கள் குலதெய்வம் எது தெரியுமா..? எப்படி வழிபட வேண்டும்..?

பிறந்த குழந்தைகள் அனைவருமே தாய், தந்தையின் இரத்தத்தோடு தொடர்பு உடையவர்கள். தந்தையின் முன்னோர்களால், தலைமுறை தலைமுறையாக வணங்கப்பட்ட தெய்வமே, முதல் தெய்வமும், இவர்களுக்கு குலதெய்வமும் ஆகும். ஆண் பிள்ளைகளுக்கு குலதெய்வம் மாறாது. ஆனால் பெண்கள், பிறந்த வீட்டில் இருக்கும் வரை, பிறந்த வீட்டு குலதெய்வத்தையும், புகுந்த வீட்டுக்கு சென்றதும் அவர்கள் வழக்கப்படி வணங்கும் குலதெய்வத்தையும் வழிபடுவார்கள்.

திருமணமான பெண்கள், புகுந்த வீட்டுக்கு சென்றதும், தங்கள் குலதெய்வத்தை மறந்து, கணவன் வீட்டு குலதெய்வத்தை வணங்கி ஏற்றுக்கொள்வார்கள். பண்டிகை, பூஜைகள், விசேஷங்கள், விரதங்களில், முதல் வழிபாடு என்பது அந்த வீட்டின் குல தெய்வத்துக்கே என்பதால், பெண்களும் கணவரின் குல தெய்வத்தை வணங்குகிறார்கள். ஆனால், பிறந்த வீட்டு குலதெய்வம், அப்பெண்ணுக்கு எப்போதும் துணையாகவே இருக்கும். குலதெய்வங்கள், தமது பெண் பிள்ளைகளை, வேறொருவர் வீட்டுக்கு அனுப்பும் போது அவர்களுக்குரிய குலதெய்வத்திடம் தாமே ஒப்படைக்கிறது என்று சாஸ்திரங்கள் சொல்கிறது.

மாங்கல்யம் ஏந்திக்கொள்ளும் போது, அப்பெண் தன்னை மொத்தமும் கணவனது குடும்பத்துக்கு அர்ப்பணித்துவிடுகிறாள். அப்போது, அங்கிருக்கும் அக்னி தீபத்தில், இரண்டு வீட்டு குலதெய்வங்களும் கண்ணுக்கு தெரியாமல் மணமக்களை ஆசிர்வாதம் செய்கிறது. அக்கணமே, மணப்பெண்ணின் குலதெய்வம், அவளை பாதுகாக்கும் பொறுப்பை நீ ஏந்திக்கொள்வாய் என்று தமது சகோதர குலதெய்வத்திடம் தெரிவித்துவிடும். அதே நேரம், அவளை பாதுகாப்பதையும் முழுமையாக கைவிடவில்லை என்று சாஸ்திரங்களும், சம்பிரதாயங்களும் தெரிவிக்கிறது.

திருமணத்திற்குப் பிறகு, புகுந்த வீட்டு குலதெய்வத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போதே, உங்கள் குலதெய்வமும் திருப்தி அடைகிறது. பிறந்த வீட்டு குலதெய்வத்துக்கென்று தனி வழிபாடு கிடையாது. எல்லா ஆலயங்களுக்கும் செல்வது போல், உங்கள் பிறந்த வீட்டு குலதெய்வத்தையும் வழிபடலாம். அதை வணக்கக் கூடாதென்று எந்த தடையும் கிடையாது. ஆண்களை அவர்களது குலதெய்வம் காக்கிறது என்றால், பெண்கள் பிறந்தவீடு, புகுந்த வீடு என்று இரண்டு குலதெய்வங்கள் காக்கும் அருளை பெறுகிறார்கள்.

Read More : புதிதாக பாலகம் தொடங்கப் போறீங்களா..? அதிக லாபம் கிடைக்கும்..!! எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க..!!

English Summary

Married women get the grace of two house deities guarding the house of birth and the house of entry.

Chella

Next Post

குட் நியூஸ்...! 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூலை 15-ம் தேதி வரை நேரடி சேர்க்கை...!

Sun Jun 30 , 2024
Direct admission till 15th July for 8th and 10th passed students.

You May Like