பொதுவாக நிறுவனங்கள், அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது வேலையினை விரும்பி செய்வதை விட, பல காரணிகளுக்கு மத்தியில் வேறு வழியில்லாமல் செய்து கொண்டிருப்பர். பலரும் தங்களுக்கு பிடித்தமான விருப்பமான வேலைகள் கிடைத்தால் மாற தயாராக இருப்பார்கள். அதற்கு சிறந்த உதாரணம் தான் இந்த பதிவு. இந்திய தொழில் வல்லுநர்கள் 80% பேர் வரையில் தங்களது வேலையில் இருந்து நடப்பு ஆண்டில் மாறத் தயாராக இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அவர்கள் நியாயமான சம்பளம் மற்றும் வேலை வாழ்க்கை சமநிலை, நெகிழ்வுத்தன்மை என பலவற்றையும் அனுமதிக்கும் வேலைகளில் ஆர்வமாக உள்ளனர்.
தங்களது வேலையினை மாற்ற நினைக்கும் பெரும்பாலான ஊழியர்கள், தங்களுக்கு அதிக பணம் தேவைப்படும் நிலையில் தான், வேற வேலைக்கு மாற நினைக்கின்றனர். இது தான் மிக முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினங்கள், நிதி ரீதியாக பாதுகாப்பாக இருக்க நினைப்பவர்கள் சிறந்ததொரு வேலையை தேடுவதாக கூறப்படுகிறது. அதேபோல வேலை வாழ்க்கை என இரண்டையும் சமமாக பார்க்க, அதற்கேற்ப வேலைகள் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆக இதுவும் அவர்கள் மாற்று வேலை தேட முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதுகுறித்து 27 ஊழியர்களிடம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வானது நவம்பர் 30, 2022 முதல் டிசம்பர் 2, 2022 வரையில் நடத்தப்பட்டது. இதில், 88% தொழில் வல்லுனர்கள் 18 வயது முதல் 24 வயது வரையிலானவர்களாகும். 64% பேர் 45 மற்றும் 54 வயதுடையவர்கள் ஆவர்.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 32% தொழில் வல்லுனர்கள் தங்களது திறமைகளில் அதிக நம்பிக்கையுடன் இருப்பதாகவும், அவர்கள் சிறந்த வேலையை செய்ய முடியும் என நம்புவதாகவும் தெரிவித்தனர். அவர்கள் தங்கள் பதவியை விட்டு வெளியேறினால், மற்ற வேலைகளுக்கு விண்ணப்பிப்பதில் நம்பிக்கை உள்ளதா? என்ற நிலையில் 78% பேர் உறுதியாக உள்ளதாகவும் பதிலளித்துள்ளனர். தொழில் வல்லுனர்கள், நியாயமான சம்பளம், வேலை வாழ்க்கை சம நிலை, நெகிழ்வுத் தன்மையை வழங்கும் வேலையை தான் வல்லுனர்கள் தேடி வருகின்றனராம். தற்போது உலகளாவிய அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், தாங்கள் எப்படியேனும் முன்னேறி விட வேண்டும் என்று தீவிரமாக மாற்று வாய்ப்புகளை தேடி வருவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
தொடர்ந்து வல்லுனர்கள் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தங்களுக்குள் தங்களது திறமையை முதலீடு செய்ய வேண்டும். இது அவர்களின் எதிர்காலத்தில் பணிகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் திறனையும் அதிகரிக்கும். கடந்த ஆண்டில் மொத்தம் 365 மில்லியன் மக்கள் தங்கள் லிங்க்ட் இன் profile- ஐ சேர்த்துள்ளனர். இது ஆண்டுக்கு 43% வளர்ச்சியாகும். இது ஒரு வெற்றிகரமான மற்றும் நீண்டகால வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கான ஒரு புத்தாலிசலித்தனமான உத்தியாகும்.