புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை கடந்த சில நாட்களாக திடீரென குறைந்தது. இதற்கான காரணத்தையும், தங்கம் விலை வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பதையும் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
இது குறித்து அவர் தனது யூடியூப் சேனலில், “கடந்த சில நாட்களுக்கு முன்பு 22 கேரட் தங்கம் ரூ. 6900ஐ தாண்டியது. அதேபோல 24 கேரட் தங்கம் 7500ஐ தாண்டியது. தங்கம் விலை இவ்வளவு சீக்கிரம் அதிகரிக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கலாமா எனப் பேச்சு எழுந்ததற்கே இந்தளவுக்குத் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதேநேரம் அவர்கள் வட்டி விகிதத்தை அதிகரித்தால் தங்கம் எந்தளவுக்கு அதிகரிக்கும் என்பதை யோசனை செய்து பாருங்கள்.
அமெரிக்க மத்திய வங்கி செப்டம்பர் மாதமே வட்டி விகிதத்தைக் குறைக்கலாம் என்ற தகவல் வெளியானதே இதற்குக் காரணம். வரும் காலத்தில் நிச்சயம் தங்கம் விலை அதிகரிக்கும்” என்று தெரிவித்தார். அதேபோல இப்போது கடந்த 2 நாட்களாகத் தங்கம் விலை ஏன் குறைந்துள்ளது என்பதையும் அவர் விளக்கியுள்ளார். இது குறித்து அவர் மற்றொரு வீடியோவில், “அமெரிக்க மத்திய வங்கி ஆலோசனைக் கூட்டத்தில் என்ன விவாதித்தார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க மத்திய வங்கி அதிகாரிகள் சிலர் வட்டியை மேலும் அதிகரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். எனவே, இப்போதைக்கு வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு இல்லை.
இந்தத் தகவல் வெளியான உடனேயே டாலர் மதிப்பு அதிகரித்தது. இதன் காரணமாகவே தங்கம் விலை குறைந்தது. எனவே, தங்கம் வாங்க நினைப்பவர்கள் தங்கம் வாங்க இதுவே சரியான நேரம்” என்றார். மேலும், தங்கம் விலை வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பதை மற்றொரு வீடியோவில் விளக்கிய ஆனந்த் சீனிவாசன், “தங்கத்தை வாங்க மறக்காதீர்கள். தங்கம் இங்கிருந்து 15% வரை விலை அதிகரிக்க வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. எனவே, தங்கம் வாங்க மறக்காதீர்கள்” என்றார்.
Read More : வில்லங்க சான்றிதழில் ஏதேனும் பிழையா..? பதிவுத்துறை செய்து கொடுத்த சூப்பர் வசதி..!!