fbpx

’பத்திரிகையாளரையே சந்திக்க பயப்படும் மோடியிடம் வீரத்தை பற்றி பேசி என்ன பயன்’..!! விளாசிய கமல்..!!

ஈரோட்டில் திமுக வேட்பாளரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”பத்திரிகையாளரையே சந்திக்க பயப்படும் ஒருவரிடம் வீரத்தை பற்றி பேசி என்ன பயன் இருக்கப் போகிறது. நாம் கொடுக்கிற வரியில், ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா தான் திரும்பி வருகிறது. ஆனால், இங்க நம்ம ஊருக்கு வேலை தேடி வர்ராங்களே அவர்களுடைய ஊரில் இருந்து மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால், அவர்களுக்கு 7 ரூபாயை மத்திய அரசு திருப்பி கொடுக்கிறது. ஆனால், அங்கே இருந்து தான் தமிழகத்திற்கு கூலி வேலைக்கு வருகிறார்கள். அப்போ இந்த பணம் என்னாச்சு? இதனை நாம் கேட்க வேண்டும்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது ஆண்டாண்டு காலமாக நம்மை பற்றி மற்றவர்கள் சொல்லும் புகழ். நாம் ஏற்றுக்கொண்ட ஒரு பொறுப்பு. கடமை. இங்கே வரும் போது பிரதமர் மோடி மழலை தமிழில் ஒரு இரண்டு மூன்று தமிழ் வார்த்தைகளில் பேசுவார். வரப்பு உயர நீர் உயரும். இது எல்லாம் நம்மளுக்கு தெரியும். ஆனால், நாம இப்படி கேட்டதே இல்லை. அட! ஒளவையாரே இன்னொரு மொழியில் இப்படி பேசியிருக்கிறார் போல சந்தேகப்படும் வகையில் மோடி பேசுகிறார்.

நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். அங்கே வடநாட்டில் யாராவது கட்டப்பா என்று பெயர் வைத்துள்ளனரா? வ உ சி என்று பெயர் வைத்துள்ளனரா? ஆனால், இங்கே நேரு என்று பெயர் வைத்தவர்கள் கூட இருக்கிறார்கள். தமிழன் தேசிய நீரோட்டத்தில் கலக்க மாட்டான் என்பது எல்லாம் பொய். எங்கள் பெயரை கேட்டாலே தெரியும். இதற்கு மேல் உங்களுக்கு என்ன வேண்டும். பத்திரிகையாளரையே சந்திக்க பயப்படுகின்ற ஒருவரிடம் வீரத்தை பற்றி பேசி என்ன பயன்“ என்று பேசினார்.

Read More : ராம்ஜான் பண்டிகை..!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!! மாணவர்கள் ஷாக்..!!

Chella

Next Post

JOB | ரயில்வேயில் 9,144 காலியிடங்கள்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!

Sat Mar 30 , 2024
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) டெக்னீஷியன் பதவிக்கு 9,000 வேலை வாய்ப்பு அறிவிப்புகளை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, விண்ணப்ப நடைமுறை மார்ச் 9ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. Technician Grade – I (Signal) – 1092 பணியிடங்கள் மற்றும் Technician Grade – III – […]

You May Like