பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. நேற்றைய தினம் ஸ்மோல் ஹவுஸில் இருக்கும் போட்டியாளர்கள் தங்களால் சமைக்க முடியாது என்று ஸ்டிரைக் நடத்தினர். பிறகு தலைவர் சென்று அந்த பிரச்சனையை தீர்த்து வைத்தார். அத்தோடு இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ ரிலீஸ் ஆகி உள்ளது.
பிக்பாஸ் மீண்டும் வினோதமான ஷாப்பிங் ரிபெமிம் டாஸ்க் கொடுத்துள்ளார். அந்த டாஸ்கில் தோற்றால் வீட்டில் சமைக்கப்படும் உணவுகள் தரப்படமாட்டாது என்று கூறியுள்ளார். அந்த டாஸ்கில் பங்குபற்றுவதற்கு விசித்ரா, ரவீனா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் செல்கின்றனர். ஒரு தனி அறையில் மூவரும் அடைக்கப்படுகின்றனர்.
அந்த அறையில் ஒரே பாடல் மீண்டும் மீண்டும் ஒலிப்பது போன்று ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த டாஸ்கில் இவர்கள் வெற்றி பெறுவார்களா? என்ற கேள்வி எழுகிறது என்ன நடைபெற போகிறது என்று பொருத்திருந்து பார்ப்போம்.