fbpx

என்னடா இது..? 35 நாட்களில் 6 முறை பாம்புகளிடம் கடி வாங்கிய இளைஞர்..!! சனி, ஞாயிறு மட்டும் தான் கடிக்குதாம்..!!

கடந்த 35 நாட்களில் மட்டுமே 6 முறை விஷப் பாம்புகளிடம் இளைஞர் ஒருவர் கடி வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக மக்களின் மத்தியில் பாம்புகள் பழிவாங்கும் எண்ணம் கொண்டவை என்று பேசப்பட்டு வருகிறது. அந்த மாதிரியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தவகையில், உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள சவுரா கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் விகாஸ் தூபே (24). இவரை கடந்த 35 நாட்களில் 6 முறை விஷப் பாம்புகள் கடித்துள்ளது.

இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, முதல் முறையாக கடந்த ஜூன் 2ஆம் தேதி பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பின் உயிர் பிழைத்தார். பின்னர், ஜூன் 2 முதல் ஜூலை 7ஆம் தேதி வரை 6 முறை பாம்பு கடித்துள்ளது. இவர், வீட்டில் இருப்பதால் தான் பாம்பு கடிக்கிறது என்று உறவினர் வீட்டிற்கு விகாஸை அவரது பெற்றோர்கள் அனுப்பி வைத்தனர்.

ஆனால், உறவினர் வீட்டில் வைத்தும் 5-வது முறையாக கடித்துள்ளது. பிறகு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், நேற்று 6 -வது முறையாக கடித்துள்ளது. இதுகுறித்து விகாஸ் தூபே கூறுகையில், “என்னை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன. என்னை கடிக்க போவதை முன்கூட்டியே என்னால் உணர முடிகிறது” என்றார்.

Read More : கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் புதிய வீடு..!! இவ்வளவு பிரம்மாண்டமா..? வைரலாகும் வீடியோ..!!

English Summary

In the last 35 days alone, a young man has been bitten by poisonous snakes 6 times.

Chella

Next Post

உஷார்..!! சிறுவர், சிறுமிகளை பலாத்காரம் செய்து வீடியோ..!! இணையத்தில் வெளியிட்டு பணம் சம்பாதித்த இளைஞர்..!!

Wed Jul 10 , 2024
James Victor Raja, who sexually assaulted girls and took obscene pictures and sold them on the Internet, was sentenced to life imprisonment.

You May Like