ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு மலிவு விலையிலும், இலவசமாகவும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் தற்போது சுமார் 2 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், சுமார் 35,233-க்கும் அதிகமான ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயங்கும் ரேஷன் கடைகளுக்கு வாரத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படுகிறது.
இந்நிலையில், ரேஷன் கடைகள் வரும் 12ஆம் தேதி இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்க ஏதுவாக, ஜனவரி 12ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடு செய்யும் வகையில், வரும் 16ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் கடந்த 7ஆம் தேதி தொடங்கிய நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் முக.ஸ்டாலின் நேற்று (ஜனவரி 10) தொடங்கி வைத்தார். ஜனவரி 13ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.