fbpx

”இதெல்லாம் என்ன மாதிரியான திராவிட மாடல்”..!! முதல்வர் முக.ஸ்டாலினை கடுமையாக சாடிய அண்ணாமலை..!!

மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காமல் இருப்பது என்ன மாதிரியான மாடல் என்று அண்ணாமலை கேள்வி கேட்டுள்ளார்.

உடுமலைப்பேட்டை பகுதியில் இருக்கும் மலைவாழ் கிராமம் ஒன்றில், சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணிப் பெண்ணை துணியை கொண்டு டோலி கட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், இந்நிகழ்வை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ”திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள மலைவாழ் கிராமம் ஒன்றில், சாலை வசதி இல்லாததால், கர்ப்பிணிப் பெண் ஒருவரை, துணியால் டோலி கட்டி, மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லும் காணொளி ஒன்றை, சமூக வலைத்தளத்தில் காண நேர்ந்தது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

கடந்த 2000 ஆம் ஆண்டு, அன்றைய பாரதப் பிரதமர் அமரர் வாஜ்பாய் அவர்கள் கொண்டு வந்த கிராம சாலைகள் திட்டம் மூலம் பல ஆயிரம் கோடி நிதி தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டும் திருப்பூர், வேலூர் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு இன்னும் சாலை வசதிகள் கிடைக்காமல் இருப்பதே, இத்தனை ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நடந்த ஆட்சிகளின் அவல நிலைக்குச் சான்று.

மத்திய அரசின் திட்டங்களுக்குப் பெயரை மாற்றுவதில் மட்டும் முனைப்புடன் இருக்கும் முதலமைச்சர் திரு.ஸ்டாலின், அந்தத் திட்டங்களை ஒரு நாள் விளம்பரத்துக்காக, வெறும் அறிவிப்போடு மட்டும் நிறுத்திக் கொள்கிறாரே தவிர, அவற்றை நிறைவேற்றுவதில்லை. மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காமல் இருப்பது என்ன மாதிரியான மாடல் என்பதை, முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : Watch Video | சூரிய கிரகணத்தின்போது வானத்தில் வட்டமடித்த ஏலியன்கள்..!! பொதுமக்கள் அச்சம்..!!

Chella

Next Post

இந்து மாணவிகளுடன் பேசிய முஸ்லிம் மாணவன் மீது தாக்குதல்!! - புனே-வில் பரபரப்பு!!

Wed Apr 10 , 2024
இந்து மாணவிகளுடன் பேசியதலால் முஸ்லிம் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் புனே-வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புனேவில் உள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் 19 வயதுடைய முஸ்லிம் மாணவர் ஒருவர், இரண்டு இந்து மாணவிகளுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அந்த மாணவனை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் மாணவர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், “கடந்த ஞாயிற்றுக்கிழமை […]

You May Like