தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமானோர் திரண்டு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அவர் பணம் பற்றி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. அதில் என்னய்யா காசு காசு மக்கள் கொடுத்தது அது மக்களுக்கே போகட்டும். எனக்கு என்று ஒரு இடம் தந்திருக்கிறீங்களே அது போதும். செத்தா அர்ணா கயிறைக் கூட எடுத்திட்டு போகப்போறதில்லை என்று பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.