fbpx

வீட்டிலுள்ள பல்லிகள் உங்களை கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்..? உயிருக்கு ஏதேனும் ஆபத்தா..?

வீட்டில் பல்லிகள் காணப்படுவது மிகவும் சாதாரணமான ஒன்று தான். அவற்றால் மனிதர்களுக்கு பெரும் அளவில் எந்தவித ஆபத்துகளும் ஏற்படுவதில்லை. இருப்பினும், பலர் பல்லிகளை கண்டால் அஞ்சுவது உண்டு. மேலும், வீட்டில் பல்லிகள் காணப்படுவது மிகவும் நல்ல விஷயமாகவே பலரும் பார்க்கின்றனர்.

ஏனெனில் பல்லிகள் இருந்தால் அங்கு பூச்சித்தொல்லைகள் அதிகம் இருக்காது. ஏனென்றால் பல்லிகள் பூச்சிகளை தின்று விடும். சமூக வலைதளமான கோராவில் யூசர் ஒருவர் மிகவும் வித்தியாசமான ஒரு கேள்வியை எழுப்பி இருக்கிறார். அதாவது கெக்கோ என அழைக்கப்படும் பல்லி ஒருவரை கடித்தால் அவருக்கு என்ன ஆகும். எந்த விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டியது இருக்கும். ஒரு வேளை பல்லி கடித்தால் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படுமா? என்பது போன்ற கேள்வியை அவர் எழுப்பினார்.

இதற்கு சமூக வலைத்தளவாசிகள் பலரும் பல்வேறு விதமான பதில்களை அளித்து வருகின்றனர். அதில், விச்சர் ரத்தோட் எனும் பெயர் கொண்ட நபர் ஒருவர் பதில் அளித்துள்ளார். “ஒருவேளை பல்லி ஒருவரை கடித்தால் கடிபட்ட இடத்தை சுத்தமான நீர் அல்லது டெட்டால் கொண்டு கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் உடல் முழுவதும் விஷம் பரவுவதை இது தடுக்கும். குறிப்பாக பல்லியின் பற்கள் மிகவும் சிறியதாக இருக்கும். இதன் காரணமாக அந்த இடத்தில் காயம் கூட கண்ணுக்குத் தெரியாமல் இருக்கலாம் அல்லது பல்லியின் பற்கள் காயத்திலேயே கூட தங்கியிருக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் காயத்தை மிகவும் கவனமாக சுத்தமாக கழுவி விட வேண்டும்.”

சில நேரங்களில் இரத்தப்போக்கு ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. பல்லி கடித்தால் டெட்டனஸ் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே, டெட்டனஸ் இன்ஜெக்ஷனை எடுத்துக் கொள்வது நல்லது. குறிப்பாக கடிப்பட்ட இடத்தில் ஐஸ் கட்டியை வைக்கக்கூடாது. அதற்கு பதிலாக பேண்டேஜ் வைத்து காயத்தை மூட வேண்டும் என்று அந்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி, வீட்டில் காணப்படும் பல்லிகள் விஷத்தன்மையற்றவை. இவற்றால் மற்றவர்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது. ஆனால், அவை ஒருவரை கடிக்கும் பட்சத்தில் சருமத்தில் தடிப்புகள் அல்லது சொறி போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே, பல்லி கடித்தால் உடனடியாக முதலுதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இது தவிர ரெப்ட்டைல்ஹீரோ.காம் என்னும் வலைதளத்தில் பல்லிகள் கடிப்பதால் எந்தவித வலியும் ஏற்படாது அல்லது ஆபத்தும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல்லிகள் மனிதர்களை தாக்குவது என்பது மிகவும் அரிதாக நடக்கும் நிகழ்வு என்றும், தன்னை சுற்றி ஆபத்து இருப்பதாக உணர்ந்தால் மட்டுமே பல்லிகள் இவ்வாறு செய்யும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடிக்கும் அளவிற்கு அவைகளுக்கு பெரிய பற்கள் இல்லை எனவும் அவ்வாறு கடித்தாலும் நமது சருமத்தில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது எனவும் குறிப்பிட்டுள்ளனர். வீட்டில் இருக்கும் பல்லிகள் பொதுவாகவே பூச்சிகளை வேட்டையாடுவதற்காகவே தங்களை தகவமைத்துக் கொண்டுள்ளன. அவற்றின் பற்கள் மற்றும் தாடைகள் என அனைத்துமே சிறிய பூச்சிகளை வேட்டையாடும் வகையில் உள்ளன. உதாரணத்திற்கு ஈ, கொசு, சிறிய பூச்சிகள் ஆகியவற்றை பல்லிகள் வேட்டையாடும்.

Chella

Next Post

அசம்பாவிதங்களை தவிர்க்க இன்று முதல் 144 தடை உத்தரவு..!! சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அதிரடி..!!

Mon Oct 23 , 2023
விடுதலை போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களின் குருபூஜை விழா வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி, இன்று முதல் (அக்டோபர் 23) அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மருது சகோதரர்களின் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் 24ஆம் தேதி அரசு விழாவாக அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. மருது பாண்டியர் குருபூஜை விழாவுக்கு […]

You May Like