ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நீலகுண்டா கிராமத்தில் நாகராஜ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அவரது மனைவி மீண்டும் கர்ப்பமானதால் அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் நாகராஜ் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அருகிலேயே நாகராஜ்-யின் சகோதரர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவரது சகோதரர் மகளான சிறுமி பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், பள்ளிக்கு சிறுமி செல்லும் போது திண்பண்டங்கள் வாங்கித் தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் நாகராஜ். அங்கு தனது மகள் வயது கொண்ட சிறுமியை மிரட்டி நாகராஜ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இதுகுறித்து வெளியே சென்னால் பெற்றோரை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் சிறுமி அச்சம் காரணமாக வெளியே சொல்லவில்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பலமுறை சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இதனால், சிறுமி கர்ப்பமானார். மகளின் உடல்நிலையில் மாற்றத்தை அறிந்த தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், சிறுமி 8 மாத கர்ப்பிணியாகவும் இருந்துள்ளார். பின்னர் பெற்றோர் சிறுமியிடம் நடந்த விஷயத்தை கேட்டனர்.
அப்போது சிறுமி நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த பெற்றோர் நாகராஜை பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து ஊர் பொதுமக்கள் உதவியுடன் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.