fbpx

பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டலைக் கையாள்வதற்கு என்ன SOPகள் பின்பற்றப்படுகின்றன?

SOP: டெல்லி என்.சி.ஆரில் உள்ள 100 பள்ளிகளுக்கு நேற்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், தலைநகர் மக்கள் பீதியில் உள்ளனர். இந்த அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டெல்லி போலீஸ், வெடிகுண்டு படை மற்றும் தீயணைப்பு படை வீரர்களை டெல்லி பப்ளிக் ஸ்கூல் உட்பட பல புகழ்பெற்ற பள்ளிகளுக்கு அனுப்பி தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். எனினும், இதுவரை எந்த ஒரு பள்ளியிலும் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டு வருகிறது.

SOP என்றால் என்ன? SOP என்பது நிலையான இயக்க நடைமுறையைக் குறிக்கிறது. எந்தவொரு பேரிடரின் போதும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே SOP இன் முக்கிய நோக்கமாகும். எஸ்ஓபியை தொடர்ந்து, வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்தால், போலீசார், வெடிகுண்டு தடுப்பு பிரிவு, தீயணைப்பு படை, ஆம்புலன்ஸ் போன்றவை உடனடியாக வரவழைக்கப்படுகின்றன.

இந்த நேரத்தில், பாதிக்கப்பட்ட பகுதிகள் வெளியேற்றப்பட்டு, மக்கள் முதலில் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதையடுத்து, அப்பகுதி முற்றுகையிடப்பட்டு போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு, வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டால், அதை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Readmore: இந்தியாவின் முதல் வந்தே பாரத் மெட்ரோ ரயில் அறிமுகம்!… ஜூலை முதல் சோதனை ஓட்டம் தொடங்கும்!

Kokila

Next Post

பலி எண்ணிக்கை உயர்வு!... நெடுஞ்சாலை இடிந்து விழுந்ததில் 36 பேர் பலி!... சீனாவில் வெளுத்து வாங்கும் கனமழை!

Thu May 2 , 2024
Highway Collapse: சீனாவின் தெற்கு குவாங்டாங் மாகாணத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக நெடுஞ்சாலை இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் சில பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளப்பெருக்கு மற்றும் ஆலங்கட்டி மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக மீஜோ நகரில் உள்ள நெடுஞ்சாலையின் 17.9 மீட்டர் நீளமுள்ள பகுதி நேற்று அதிகாலை 2 மணியளவில் இடிந்து விழுந்தது. […]

You May Like