குழந்தைகள் இயற்கையாகவே எல்லா விஷயங்களிலும் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். இது என்ன, அது என்ன என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டும்போது, தவறுதலாக ஒரு சில நேரங்களில் அவர்கள் ஆபத்துகளில் சிக்கிக் கொள்வார்கள். அந்த வகையில், சிறு பிள்ளைகள் தங்களுடைய வாயில் விளையாட்டு பொருட்களையோ அல்லது வேறு ஏதேனும் பொருட்களையோ வைத்து விளையாடும்போது, அதனை விழுங்கி விடுவதற்கான சாத்தியங்கள் உள்ளது.
குழந்தை ஏதாவது விழுங்கி விட்டது என்பதை அறிந்து கொள்வதற்கான சில அறிகுறிகள் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நெஞ்சு வலி, தொண்டையில் ஏதோ அடைத்திருப்பது போன்ற உணர்வு, விழுங்குவதில் சிக்கல், வாந்தி, சாப்பிட மறுத்தல் போன்றவை இதில் அடங்கும். அதே நேரத்தில் வயிறு அல்லது குடலில் சிக்கி இருக்கும் பொருட்கள் அடி வயிற்று வலி, வாந்தி அல்லது ரத்தம் கலந்த மலத்தை ஏற்படுத்தலாம்.
குழந்தைகள் எதையாவது விழுங்கி விட்டால், நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும்?
* காயின்கள், மார்பில், பலூன் மற்றும் சிறு பொம்மை பாகங்கள் போன்றவற்றை குழந்தைகளின் கைக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும்.
* ஒருவேளை உங்கள் குழந்தை பட்டன், பேட்டரிகளை விழுங்கி விட்டால், அதனை விழுங்கிய ஒரு சில மணி நேரங்களில் அதற்கான சிகிச்சையை வழங்க வேண்டும். இல்லையென்றால், அது மோசமான உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
* உங்கள் குழந்தை ஏதோ ஒரு பொருளை விடுங்கி விட்டதாக சந்தேகம் ஏற்பட்டால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
செய்யக்கூடாதவை:
* நீங்களாகவே குழந்தைக்கு லாக்சேட்டிவ்களை கொடுத்து பொருளை வெளியே எடுத்து விடலாம் என்ற தவறான முடிவுக்கு வர வேண்டாம். இது குழந்தைக்கு மேலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
* கைகள் மூலமாக வாந்தி எடுக்க தூண்டுதல் கூடாது. இது நிலைமையை இன்னும் மோசமாக்கும். மேலும், சில சமயங்களில் குழந்தை வாந்தியை நுரையீரலுக்குள் விழுங்கி விட வாய்ப்புள்ளது.
* குழந்தை ஏதாவது ஒரு பொருளை விழுங்கி விட்டால், அதற்கு வாய் வழியாக எந்த ஒரு உணவையும், தண்ணீரையும் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்
Read More : பிஃஎப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.!! உங்களுக்கு இலவசமா ரூ.50,000 வரப்போகுது..!!