ஆன்லைன் மூலமாக பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பல சமயத்தில் பண பரிவர்த்தனை செய்யும் பொழுது கவனக்குறைவு காரணமாக வேறு ஒரு நபருக்கு பணத்தை மாற்றி செலுத்தக்கூடும். அத்தகைய சமயத்தில் அந்த பணத்தை திரும்ப பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.
தவறுதலாக பணத்தை செலுத்தி விட்டால் என்ன செய்வது…?
முதலில் உடனடியாக வங்கியைத் தொடர்பு கொண்டு நீங்கள் வங்கியில் தவறான கணக்கிற்கு பணத்தை அனுப்பி உள்ளதை நிரூபித்து, அதற்கான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் பணப் பரிமாற்றம் தொடர்பான தகவலை வங்கி அதிகாரிகளுக்கு விரிவான பதிலை கொடுக்க வேண்டும். நீங்கள் வங்கி அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் பொழுது அவர்கள் கேட்கும் விவரங்களை சரியாக கொடுக்க வேண்டும்.
பின்னர் பணப்பரிமாற்றம் தவறாக நடந்திருந்தால் வங்கி சார்பாக நீங்கள் அனுப்பிய நபர்களை அணுகலாம் அதனைத்தொடர்ந்து பணத்தை மாற்றி அமைக்க கூறலாம். பயனாளி ஒப்புக்கொண்டால், பரிவர்த்தனை 7 வேலை நாட்களுக்குள் திருப்பி உங்கள் வங்கி கணக்கிற்கு செலுத்தக்கூடும். வேறொரு கிளையிலிருந்து பயனாளியாக இருந்தால், தீர்வுக்காக வங்கி மேலாளரைச் சந்திக்க நீங்கள் தனிப்பட்ட முறையில் கிளைக்குச் செல்ல வேண்டும்.