விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பானது. இறுதியாக நடந்த பிக் பாஸ் 6ல் அசீம் அனைவரின் மனதையும் வென்று வெற்றி பெற்றார்.
இந்த நிகழ்ச்சியை கடந்த ஆறு சீசன்களாக மிக சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார் உலக நாயகன் கமல்ஹாசன். கடந்த சீசனில் மட்டும் ஒரு பக்கமாக, விடுதலை சிறுத்தைக்கட்சியைச் சேர்ந்த விக்ரமனுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து அசீம் ரசிகர்களின் கோபத்தை பெற்றார், வெற்றி பெற்ற நேரத்திலும் கூட அசீமை விட விக்ரமனையே மிகவும் சிறப்பாக விளம்பரப்படுத்தினார். இருந்தாலும் உலக நாயகன் கமல்ஹாசனை தவிர வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக பிக் பாஸ்
நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாது என்றே சொல்லலாம். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 7யும் உலக நாயகனே தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 7க்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை உற்சாக படுத்தியுள்ளது.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7ன் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது, அதில் எதிர்பார்க்காத ட்விஸ்டையும் சொல்லியுள்ளார் கமல், அது என்னவென்றால் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வீடு இல்லையாம் இரண்டு வீடு இருக்கிறதாம். அதாவது சும்மாவே பிக் பாஸ் வீடு ரணகளமாகத் தான் இருக்கும். ஆனால் இப்போது வீடே இரண்டாகப் போகிறதாம். இதனால் இந்த முறை எதிர்பார்ப்பு அதிகாமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
பிக் பாஸ் சீசன் 7ன் இரண்டாவது ப்ரோமோவில் “கோர்ட்டுடன் ஒரு பக்கம் காரில் ஏரிய கமல் கிளம்பலாம் என்று கூற, இன்னொரு பக்கம் தாராளமா நாங்க ரெடி என்று கூறி சென்னை மொழியுடன், வழக்கம் போல புது சீசன், புது கண்டெஸ்டண்ட் அதானே என்று பேசுகிறார் இன்னொரு கமல். “அதேபோல அசத்தலான டாஸ்க் அட்டகாசமான சேலஞ்” என்று கோர்ட்டுடன் இருக்கும் கமல் கூற, அதெல்லாம் தெரியும் அதே கன்பெஷன் அதே கன்பூஷன், இதுல இன்னா இமாஜினேஷன் இருக்கு, என்று சென்னை தமிழில் இரண்டாவது கமல் நக்கலடிக்க, என்ன பேச விடுங்கய்யா என்று முதல் கமல் கூறுகிறார்.
பிறகு கோர்ட்டுடன் இருக்கும் கமல் இந்த சீசன் “எதிர்பாராததை” என்று கூறும்போது குறுக்கிட்ட இரண்டாவது கமல் “எதிர்பாருங்கள்” என்று கூறி அதானே என்று மீண்டும் கிண்டலடிக்கிறார். மேலும் “100 நாட்கள் 60 கேமராக்கள்” என்று முதல் கமல் கூற குறுக்கிட்ட இரண்டாவது கமல் நக்கலாக சிரித்துக்கொண்டே “ஒரு வீடு அதானே” என்று கூற.. அதான் இல்ல இந்த முறை இரண்டு வீடு என்று இரண்டாவது கமலுக்கு ட்விஸ்ட் கொடுக்கிறார். மேலும் சும்மாவே வீடு இரண்டாகும், இப்ப வீடே இரண்டாகிடுச்சு இப்போ என்ன ஆகும் என்று கேள்வியுடன் முடிகிறது இரண்டாவது ப்ரோமோ. சும்மா சொல்லக்கூடாது இந்த ப்ரோமோவின் நடிப்பில் அசத்தியுள்ளார் உலக நாயகன்.