fbpx

3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்..? சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி..!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில், சட்ட மசோதாக்களுக்கு அனுமதியளிப்பதற்கு ஆளுநருக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாவை கிடப்பில் போடுவது கவலைக்குரியது. எதுவும் செய்யாமல் கோப்புகளைக் கிடப்பில் போட முடியாது. ஆளுநர் தரப்பில் நவம்பர் 13ஆம் தேதி அவர் மசோதாக்களை மாநில அரசுக்கு திருப்பியனுப்பிவிட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது. நாங்கள் இந்த வழக்கில் எங்கள் கருத்தை முன்வைத்தது நவம்பர் 10-ல். அதன் பின்னர் மூன்றே நாட்களில் ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார். ஆனால், இந்த மசோதாக்கள் 2020-ல் இருந்தே கிடப்பில் உள்ளன. அப்படியென்றால் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய பின்னர் ஆளுநர் முடிவெடுத்திருக்கிறார்.

3 ஆண்டுகளாக அவர் என்ன செய்து கொண்டிருந்தார்..? கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாடும் வரை ஏன் ஆளுநர்கள் காத்திருக்க வேண்டும்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. தொடர்ந்து, ஆளுநரின் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு காத்திருப்பதாகக் கூறி வழக்கை டிசம்பர் 1ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.

Chella

Next Post

இதை நீங்கள் செய்யவில்லையா..? அப்படினா Gpay, PhonePe இனி செயல்படாது..!! வெளியான அலெர்ட்..!!

Tue Nov 21 , 2023
கூகுள் பே, ஃபோன் பே உள்ளிட்ட பேமெண்ட் செயலிகள் மற்றும் வங்கிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக செயலில் இல்லாத UPI ஐடிகள் மற்றும் எண்களை செயலிழக்கச் செய்யுமாறு இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிவுறுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த UPI ஐடியைப் பயன்படுத்தாமல் பல நாட்கள் விட்டுவிடுவதால், பாதுகாப்புச் சிக்கல்கள் அதிகரிக்க நேரிடும். இதனால், UPI ஐடி மோசடியின் அபாயத்தைக் குறைக்க இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல பயனர்களின் UPI […]

You May Like