fbpx

என்னவா இருக்கும்..? ரஜினிகாந்தை திடீரென சந்தித்த துரை வைகோ..!! அரசியலில் பரபரப்பு..!!

மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ, நடிகர் ரஜினிகாந்த்தை திடீரென சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில், ‘வேட்டையன் ‘ படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக, தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ‘லால் சலாம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஜினிகாந்த்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ.

ரஜினிகாந்த் தமிழக மற்றும் இந்திய அரசியலை தொடர்ச்சியாக ஆழ்ந்து கவனித்து வருபவர். பல்வேறு தருணங்களில் அரசியல் கருத்துக்களையும் பேசியுள்ளார் ரஜினிகாந்த். நீண்டகாலமாக, தான் அரசியலுக்கு வருவதாக நேரடியாகவும், மறைமுகமாகவும் பேசி வந்தார். 1996 தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக ‘வாய்ஸ்’ கொடுத்திருந்தார் ரஜினிகாந்த். “ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால், தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” என்று கூறியிருந்தார். ஆனால், 2001இல் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரான பிறகு, அவரை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

பின்னர், பாபா திரைப்பட பிரச்சனையின்போது, 2004ஆம் ஆண்டு பாமக போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் அக்கட்சியை எதிர்த்து வாக்களிக்க வேண்டுமெனக் கூறினார் ரஜினி. ஆனால், திமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக, அந்த 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பின்னர் வெகுகாலம், போக்கு காட்டி கந்த ரஜினிகாந்த், கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அரசியலில் வெற்றிடம் ஏற்பட்ட சூழலில் அரசியலுக்கு வர ஆயத்தமானார். 2017ஆம் டிசம்பரில் தான் தமிழக அரசியலில் ஈடுபடப்போவதாகவும் தனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும் அறிவித்தார்.

ஆனால், கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு சற்று முன்பாக, ரசிகர்களின் ரஜினி மீதான அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அதிரடியாக அறிவித்தார். தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு இனிமேல் அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்று தெரிவித்தார். இதற்குப் பிறகு அவருடைய ரஜினி மக்கள் மன்றமும் கலைக்கப்பட்டது.

பிறகு, அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களையும் ரஜினிகாந்த் சந்திப்பதும், அவ்வப்போது விவாதங்கள் கிளம்புவதும் வாடிக்கையாக உள்ளது. அந்தவகையில், நேற்று துரை வைகோவை சந்தித்துள்ளார் ரஜினிகாந்த். இந்தச் சந்திப்பில் அரசியல் பேசப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின. நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், ரஜினி – துரை வைகோ சந்திப்பு பல்வேறு விவாதங்களைக் கிளப்பிவிட்டுள்ளது. எனினும், இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது தான் என துரை வைகோ கூறியுள்ளார்.

Chella

Next Post

லோக்சபா தேர்தல்..!! நான் போட்டியிடும் சின்னம் இதுதான்..!! ஓ.பன்னீர்செல்வம் அதிரடி பேட்டி..!!

Thu Jan 11 , 2024
”நாட்டை 10 ஆண்டுகள் சிறப்பாக ஆண்ட மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும்” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் டிடிவி தினகரனுடன் கைகோர்ப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார். அதேபோல சமீபத்தில் தமிழ்நாடு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியை ஓபிஎஸ் சந்தித்து பேசியிருந்தார். இந்நிலையில், திருச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ‘அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு’ நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் […]

You May Like