‘வருமான வரி மசோதா 2025’ நாடாளுமன்ற மக்களவையில் இன்று (பிப்.13) தாக்கல் செய்யப்பட உள்ளது.
இன்று தாக்கல் செய்யப்படும் மசோதா, நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இதையடுத்து, நாடாளுமன்ற நிலைக்குழு தனது பரிந்துரைகளை வழங்கும். பின்னர், அமைச்சரவை மூலம் திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமா..? என்பது குறித்து அரசாங்கம் முடிவெடுக்கும்” என்று அவர் கூறியிருந்தார்.
புதிய வருமான வரி மசோதா இன்று தாக்கல் செய்யப்படுவதன் மூலம் சுமார் 60 ஆண்டுகளாக இருந்து வந்த பழமையான வருமான வரி சட்டம் மாற்றப்படுகிறது. இனி ஆண்டுக்கு ரூ.12 லட்சம் சம்பாதிப்பவர்கள் வரி செலுத்த தேவை இருக்காது. இந்த புதிய சட்டத்திற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவில் நடைமுறையில் உள்ள தற்போதைய வருமான வரிச் சட்டம் 1961ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய வருமான வரிச் சட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்..?
⇛ வருமான வரி தாக்கல் செய்வதை இன்னும் எளிமையாக்க புதிய இணையதளம் அல்லது செயலி உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
⇛ வருமான வரி சட்டம் எளிமையாக்கப்பட்டு, அனைவரும் புரிந்துகொள்ளும் படி மாற்றம் செய்யப்பட உள்ளது.
⇛ பழைய வருமான வரி regime நீக்கப்படலாம் என்று கூறப்பட்டாலும், அதில் உண்மை இல்லை என்றும் கூறப்படுகிறது.
⇛ புதிய வருமான வரி regimeல் வீட்டு லோன் சலுகை போன்ற சலுகைகள் சேர்க்கப்படலாம்.
⇛ பழைய வருமான வரி regime, புதிய வருமான வரி regime இரண்டும் நடைமுறையில் இருக்கும். ஆனால், பழைய முறையில் உள்ள சலுகைகள் நீக்கப்பட வாய்ப்புள்ளது.
⇛ பிஸ்னஸ் வருமான வரி என்பது தற்போது சிக்கலாக இருக்கும் நிலையில், இதை அனைவரும் புரிந்துகொள்ளும்படி மாற்றப்படும்.
⇛ பட்ஜெட்டில்தான் ஸ்லாப் மாற்றப்பட்ட காரணத்தினால், வருமான வரி ஸ்லாப் இந்த ⇛ சட்டத்தில் மாற்றப்படாது.
⇛ குறிப்பாக, தனி நபர் வருமான வரி மேலும் எளிமையாக்கப்படும்.