செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு 2000 ரூபாய் நோட்டுகள் செல்லுமா? செல்லாதா? என்பதுதான். இந்த கேள்விக்கு ஆர்பிஐ தற்பொழுது விளக்கம் அளித்துள்ளது.
ரிசர்வ் வங்கியானது 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வருகிற 23 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து மாற்றிகொள்ளலாம் எனவும் வாடிக்கையாளர் ஒருமுறை 20,000 ரூபாய் மதிப்புள்ள 2,000 நோட்டுகளை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளது. இத்தகைய அறிவிப்பால் மக்கள் பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதில் பலராலும் கேட்கப்படும் கேள்வி செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு 2000 ரூபாய் நோட்டுகள் செல்லுமா? செல்லாதா? என்பதுதான். இந்த கேள்விக்கு ஆர்பிஐ தற்பொழுது விளக்கம் அளித்துள்ளது.
ஆர்பிஐ அளித்த விளக்கத்தில், கடந்த 2016 ஆம் ஆண்டு கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்பதை அறிவித்தது. ஆனால் ஆர்பிஐ ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இது, வங்கிகளுக்கும், பொதுமக்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகள் ஆகும். மேலும், செப்டம்பர் 30ம் தேதிக்கு மேல் 2000 ரூபாய் நோட்டுகள் சட்டரீதியான பணமாகவே இருக்கும். 2000 ரூபாய் நோட்டுகளை வைத்து பொதுமக்கள் தங்களுடைய சேவையை தொடங்கலாம் எனவும் இருப்பினும், பொது மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை, செப்டம்பர் 30ம் தேதிக்குள் ஒப்படைக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுரை வழங்கியுள்ளது.