தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் ஒருவரையொருவர் ஏமாற்றியதே விவாகரத்துக்கு காரணம் என பாடகி சுசித்ரா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் கடந்த 2005ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா ஆகிய இரு மகன்கள் உள்ளனர். தனுஷ் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நிலையில், ஐஸ்வர்யாவும் இயக்குநராக சில படங்களை இயக்கியுள்ளார். இதற்கிடையே, கடந்த 2022 ஆம் ஆண்டு தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பரஸ்பர விவாகரத்து பெறுவதாக தெரிவித்தனர். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவாகரத்துக்கு பல விதமான காரணங்கள் சொல்லப்பட்டது.
இப்படியான நிலையில் பாடகி சுசித்ரா, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பற்றி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதில், “தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட போது தனுஷை தாறுமாறாக பயில்வான் ரங்கநாதன் விமர்சித்தார். ஐஸ்வர்யாவை புகழ்ந்து பேசினார். அப்படி ஐஸ்வர்யா என்ன சாதித்தார் என தெரியவில்லை. மக்களின் அனுதாபம் எல்லாம் தனுஷ் பக்கம் தான் இருந்தது. காரணம் ஐஸ்வர்யா ஒரு கெட்ட அம்மா, தனுஷ் சிறந்த அப்பா. ஒரு அம்மாவாக தன்னை மட்டுமே பிரோமோஷன் செய்தார் ஐஸ்வர்யா.
அம்மாவாக இருந்து கொண்டு ரீல்ஸ் போடும் விஷயத்தில் யாருடனும் எனக்கு உடன்பாடு இல்லை. அம்மா என்றால் அம்மாவாக இரு. குழந்தையை பக்கத்தில் வைத்துக்கொண்டு ரீல்ஸ் போடுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஐஸ்வர்யா தனுஷ் தன்னை ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டுகிறார். அதேதான் ஐஸ்வர்யாவும் செய்திருக்கிறார். அந்த தம்பதியினர் ஒருவரையொருவர் ஏமாற்றியிருக்கிறார்கள். இருவரும் டேட்டிங் செய்யும் நபர்களோடு வெளிப்படையாக ஹோட்டலுக்கு செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள். டேட்டிங் செல்வது இயல்பு என்றாலும் திருமணமான பிறகு டேட்டிங் செல்வது சரியா? விவாகரத்து விஷயத்தில் தனுஷூக்கு தான் என்னுடைய சப்போர்ட்” என கூறியுள்ளார்.
Read More : பிரிட்ஜை அவ்வப்போது ஆஃப் செய்து வைத்தால் மின் கட்டணம் குறையுமா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!