நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன் தினம், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தது விவாதப் பொருளாகி உள்ளது. சுமார் 20 – 30 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நடைபெற்றது.. இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.. அப்போது “ அரசியல் குறித்து ஆளுநரிடம் விவாதித்தாகவும், அதை தற்போது பகிர்ந்து கொள்ள முடியாது என்று கூறினார்.. மீண்டும் அரசியலுக்கு வரும் திட்டம் உள்ளதாக என்ற கேள்விக்கு, அப்படி எந்த திட்டமும் இல்லை என்று ரஜினி பதில் கூறினார்.. மேலும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசினீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.. அதைப்பற்றி எல்லாம் தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டார்..
ஆனால் நடிகர் ரஜினி ஆளுநரை சந்தித்தது குறித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சித்து வருகின்றன.. ஆளுநர் மாளிகை அரசியல் பேசும் இடமா என்றும் கேள்வி எழுப்பி இருந்தது..
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையிடம் ரஜினி சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அண்ணாமலை “ நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கியமான மனிதர்களில் ஒருவர்.. பல கோடி மக்களின் அன்பை பெற்றவர்.. தமிழகத்தின் நலனுக்காக எப்போதும் குரல் கொடுத்தவர், நதி நீர் இணைப்பு மூலம் தமிழகத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என தமிழகத்திற்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை ஆளுநர் சந்தித்து பேசி இருக்கிறார்..
ஆளுநர் பல மனிதர்களை பல இடங்களில் மரியாதை நிமித்தமாக சந்திருத்திருக்கிறார்.. அது ஒரு மரபு.. ஆளுநர் மாளிகைக்கு பல பேர் சென்று சந்தித்து வருகின்றனர்.. அதில் ரஜினியும் ஒருவர்.. ஆளுநரிடம் அரசியல் பேசினேன் என்று ரஜினி கூறியதில் என்ன தவறு..? தங்களது இருப்பை காண்பிக்கை கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ரஜினியை விமர்சிக்கின்றனர்.. திமுக கொடுக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை வைத்துக்கு உயிர் வாழும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு வேறு வேலை இல்லை.. அதனால் ரஜினி பேசியதை விமர்சித்து வருகின்றனர்..” என்று தெரிவித்தார்..