fbpx

பிப்ரவரியில் மட்டும் இந்தியாவில் 45 கணக்குகளை தடை செய்த வாட்ஸ் அப் நிறுவனம்.. இதுதான் காரணம்…

பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் 45 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளை அந்நிறுவனம் தடை செய்துள்ளது..

உலகளவில் பிரபலமான செய்தியிடல் தளமாக வாட்ஸ் அப் நிறுவனம் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ளது.. இந்தியாவில் சுமார் 500 மில்லியன் பயனர்களைக் கொண்ட மிகவும் பிரபலமான செய்தியிடல் தளமாம வாட்ஸ் அப் உள்ளது.. இந்நிலையில் இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் மட்டும் 45 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.. வாட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள மாதாந்திர அறிக்கையில் “ புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ன் படி, பிப்ரவரி 1 மற்றும் பிப்ரவரி 28 க்கு இடையில், “4,597,400 வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டன.. அவற்றில் 1,298,000 கணக்குகள், பயனர்களிடம் இருந்து புகார்களை பெறுவதற்உ முன்கூட்டியே தடை செய்யப்பட்டன..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பயனர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் வாட்ஸ்அப் கணக்குகளை தடை செய்தது தெரியவந்துள்ளது. தவறான தகவல்களைத் தடுப்பது, இணைய பாதுகாப்பை ஊக்குவித்தல் ஆகிய காரணங்களுக்காக கணக்கு தடை செய்யப்படுகிறது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது..

நாட்டில் பிப்ரவரி மாதத்தில் மற்றொரு சாதனையாக 2,804 புகார் அறிக்கைகளைப் பெற்றதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.. வாட்ஸ் அப் செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நாங்கள் எங்கள் வேலையில் வெளிப்படைத்தன்மையுடன் தொடர்வோம் மற்றும் எதிர்கால அறிக்கைகளில் எங்கள் முயற்சிகள் பற்றிய தகவல்களைச் சேர்ப்போம்” என்று தெரிவித்துள்ளார்..

இதற்கிடையில், மில்லியன் கணக்கான இந்திய சமூக ஊடக பயனர்களுக்கு அதிகாரம் அளிக்கும் முயற்சியில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர், ராஜீவ் சந்திரசேகர் சமீபத்தில் குறைகள் மேல்முறையீட்டுக் குழுவை (GAC) தொடங்கினார், இது உள்ளடக்கம் மற்றும் பிற சிக்கல்கள் தொடர்பான பயனர்களின் பிரச்சனைகளை ஆராயும் என்று தெரிவிக்கப்படுள்ளது..

Maha

Next Post

அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை.. ராகுல்காந்தி நாளை மேல்முறையீடு..

Sun Apr 2 , 2023
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல்காந்தி நாளை மேல்முறையீடு செய்ய உள்ளார்.. 2019ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ராகுல்காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவரும் எப்படி மோடி என்ற பொதுவான பெயரை வைத்துள்ளனர் என்று கூறியிருந்தார்.. இதையடுத்து மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் […]

You May Like