fbpx

தமிழக அரசின் திட்டங்களை அறிய உதவும் வாட்ஸ் அப்..!! எப்படி பார்ப்பது..? முழு விவரம் உள்ளே..!!

பொதுமக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் வழங்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்தத் திட்டங்கள் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் பலருக்கு தெரிவதில்லை. இதன் காரணமாக தகுதியுடையவர்கள் பயன்பெற முடியாமல் போகின்றனர். மேலும், திட்டங்களை அறிந்தாலும் அதன் மூலமாக எவ்வாறு பயன் அடைவது என்பது பற்றிய விழிப்புணர்வு இல்லை. அதனை கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள அரசின் திட்டங்களை வாட்ஸ் அப் மூலமாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், இதற்கு மக்கள் நலன் bot என பெயரிடப்பட்டுள்ளது. மக்கள் இதனை தங்களது கைகளில் உள்ள ஸ்மார்ட் போன் மூலமாக தொடர்பு கொண்டு திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தமிழக அரசின் திட்டங்களை அறிய உதவும் வாட்ஸ் அப்..!! எப்படி பார்ப்பது..? முழு விவரம் உள்ளே..!!

வாட்ஸ் அப் மூலம் எப்படி தெரிந்து கொள்வது..?

  • மக்கள் நலன் bot திட்டத்தின் 94458 79944 என்ற whatsapp எண்ணை முதலில் மொபைல் போனில் பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அதன்பின் வாட்ஸ் அப் ஓபன் செய்து ’ஹாய்’ என்ன மெசேஜ் அனுப்ப வேண்டும்.
  • அடுத்ததாக உங்களது மொழி, பாலினம், சமூகம், மதம் மற்றும் ஆண்டு வருமானம் போன்றவற்றை தேர்வு செய்ய வேண்டும்.
  • நீங்கள் தேர்ந்தெடுக்கும் வகையை பொறுத்து அதில் உள்ள திட்டங்கள் உங்களுக்கு திரையில் காண்பிக்கப்படும்.

Chella

Next Post

நோட்...! ஜனவரி 23, 24 தேதிகளில் முக்கிய நிகழ்ச்சி நடைபெறும்...! மத்திய அரசு தகவல்...!

Mon Jan 9 , 2023
குடியரசு தின கொண்டாட்டங்கள் 2023-ன் ஒரு பகுதியாகயாவும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126 வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையிலும், பராக்ரம் திவாஸ்-‘பராக்கிரம தினம்’ கொண்டாடப்படுகிறது. டெல்லியில் 2023, ஜனவரி 23, 24 தேதிகளில் இந்திய ராணுவத்தினரின் வீர, தீர சாகச நிகழ்ச்சிகள் மற்றும் பழங்குடியின கலாச்சாரத்தின் அழகை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. குறிப்பாக அங்குள்ள ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் பழங்குடியினர் நடன விழாவான ‘ஆதி […]

You May Like