உலகில் கோடிக்கணக்கான பயனர்கள் தினம் தோறும் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு மெட்டா நிறுவனம் அவ்வபோது புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்தவகையில், தற்போது அனிமேஷன் செய்யப்பட்ட அவதார் அம்சத்தை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
வாட்ஸ் அப் பீட்டாவின் புதுப்பிக்கப்பட்ட அப்டேட்டில் இந்த புதிய அம்சம் கிடைக்கும் என்றும் வாட்ஸ் அப் நிறுவனம் இந்த அனிமேட்டட் அவதார் அம்சத்தை மேம்படுத்தும் பணிகளை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டு அதில் அளவில் இருக்கும் Customize Option-களில் மூலமாக தங்கள் அவதார்களை தயார் செய்து கொள்ள முடியும்.
இதனைப் போலவே வாட்ஸ் அப் வெப் அம்சத்திற்கும் புதிய வழி ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன்படி, Link With Phone Number என்ற புதிய ஆப்ஷன் ஒன்று கிடைக்கும் எனவும் இதன் மூலமாக வாட்ஸ் அப் வெப் பயன்பாட்டை சுலபமாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.