ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ்அப் ஸ்கிரீன் சேரிங் அம்சத்தை நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நிறுவனம் வாரத்திற்கு ஒரு முறை புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் மற்றும் ஜூம் போன்ற வீடியோ கான்பரன்சிங் தளங்களில் உள்ளது போல் வாட்ஸ்அப்பிலும் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. WABetaInfo இந்த அப்டேட் குறித்து தெரிவித்துள்ளது.
எப்படி செய்வது? ஆன்லைன் அலுவலக மீட்டிங் போன்றவற்றில் டீம்ஸ் மற்றும் ஜூம் போன்ற செயலிகளில் ஸ்கிரீன் ஷேரிங் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது ஒருவர் தனது வேலை குறித்த அறிக்கை அல்லது நிலை அறிக்கைகளை Presentation-ஆக ஆன்லைனில் பகிர்ந்து ஆலோசிப்பது ஆகும். மற்ற செயலிகளில் பயன்படுத்துவது போல தான், வாட்ஸ்அப்பில் ஸ்கிரீன் ஷேர் செய்ய முதலில் பயனர்களுக்கு காலி செய்ய வேண்டும். அடுத்து இடது புறத்தில் உள்ள ஸ்கிரீன் ஷேர் ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது ஸ்கிரீன் ஷேர் திரை ஓபன் ஆகும். அப்போது உங்கள் அனைத்து தகவல் விவரங்களை குறித்தான ஆக்ஸஸ் கேட்டப்படும். அதை கொடுத்தப் பின் ஸ்கிரீன் ஷேர் செய்யலாம்.
மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த அம்சம் பயன்படுத்தும் இரு தரப்பினரும் ஆப்ஸின் சமீபத்திய வெர்ஷனுக்கு அப்பேட் செய்யப்பட வேண்டும். அப்போது தான் ஸ்கிரீன் ஷேர் செய்ய முடியும். இந்த அம்சம் தற்போது பீட்டா பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.