வாட்ஸ் அப் பயனர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
நாட்டில் தற்போதைய தொழில்நுட்ப காலகட்டத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அடிக்கடி மத்திய – மாநில அரசுகளால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது இந்திய ரிசர்வ் வங்கியும் வாட்ஸ் அப் பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, உங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஏதேனும் அடையாளம் தெரியாத நபர் அல்லது உங்களுக்கு தெரியாத எண்களில் இருந்து அழைப்பு வந்தால் கவனமாக இருக்குமாறு எச்சரித்துள்ளது. இத்தகைய அழைப்புகள் மூலம் உங்களை தொடர்பு கொண்டு போலீஸ் அதிகாரி அல்லது சைபர் கிரைம் அதிகாரி என உங்களிடம் பேசுவார்கள். இவர்களின் பேச்சை யாரும் நம்ப வேண்டாம்.
சந்தேகத்திற்குரிய நபர்கள் அல்லது எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்புகள் வந்தால், என்ன செய்ய வேண்டும் என்பதையும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தி உள்ளது. மோசடி அழைப்புகள், டிஜிட்டல் அரெஸ்ட் போன்ற அழைப்புகள் ஏதேனும் உங்கள் வாட்ஸ் அப் எண் மூலம் தொடர்பு கொண்டால், அந்த அழைப்பு தொடர்பான தகவல்களை 1930 என்ற உதவி எண்ணிற்கு அழைத்து புகாரளிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
Read More : ’அப்பா என்று சொல்லிவிட்டு பிள்ளைகளை இப்படித்தான் குடிக்க வைப்பீங்களா’..? CM-ஐ அட்டாக் செய்த சீமான்..!!