fbpx

வயதுக்கு வந்ததும் தனியாக செல்லும் விலங்குகள்!… பெண் விலங்குகளின் தலைமை பண்புகள் எப்படி இருக்கும் தெரியுமா?

விலங்கினங்கள் சிலவற்றில், பெண் விலங்குகள் அபார தலைமைப் பண்பை வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக, கழுதைப்புலி, யானை, சிங்கம் ஆகியவற்றில் பெண் விலங்குகள்தான் குழுவின் தலைவராக உள்ளன. உலகில் இதுவரை அறியப்பட்டுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலூட்டிகளில் மிகச் சில உயிரினங்கள் மட்டுமே பெண் விலங்குகளால் தலைமை தாங்கி வழிநடத்தப்படுகின்றன என்கிறது ஒரு புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

விலங்குகளிடம் இருந்து மனிதர்களும் கற்றுக் கொள்ளலாம் என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இங்கிலாந்தில் உள்ள மில்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஜெனிபர் ஸ்மித் மற்றும் அவரது சகாக்கள் மூவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரையில், ஓர்கா வகைத் திமிங்கலங்கள், கழுதைப்புலிகள், புள்ளிக் கழுதைப்புலிகள், சிங்கங்கள், யானைகள், பொனோபோ வகை மனிதக் குரங்குகள், லெமூர்கள் ஆகியவற்றில் பெண் விலங்குகளே தலைமைப் பொறுப்பில் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த விலங்குகளின் இடப்பெயர்வு, இரை தேடும் முறை, மோதல்கள் உண்டாகும்போது தீர்வு காணுதல் ஆகியவற்றை ஆராய்ந்தனர்.

மனிதர்களின் டி.என்.ஏ.வின் 99 சதவீதம், நமக்கு நெருக்கமான சிம்பன்சி மற்றும் பொனோபோ வகை மனிதக் குரங்குகளைப் போலவே இருக்கும். சிம்பன்சி குரங்கில் ஆண்கள் தலைமையில் இருந்தாலும் பொனோபோ குரங்குக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவது பெண் குரங்குகள்தான். இடப்பெயர்வுக்கான திட்டங்களைத் தீட்டுவதும், உணவுகளை முதலில் உண்டு பரிசோதிப்பதும் பெண் பொனோபோ குரங்குகள்தான் என்கிறார், காங்கோ ஜனநாயகக் குடியரசில் இந்தக் குரங்குகள் குறித்து ஆராய்ச்சி செய்த கியோட்டோ பல்கலைக்கழகப் பேராசிரியர் டகேஷி புரூச்சி.

பொனோபோ குரங்குகளுக்குள் சண்டை வரும்போது தலையிட்டுச் சமரசம் செய்யும் பணியை பெண் குரங்குகளே செய்கின்றன. ஆண் குரங்குகளுடன் தனியாக மோதும்போது தோல்வியைச் சந்தித்தாலும், ஒன்றுக்கும் மேலான பெண் குரங்குகள் ஒன்றாக இணைந்து ஆணை எதிர்கொண்டு, வெற்றியைப் பெறுகின்றன’’ என்கிறார் டகேஷி.

யானைகள், ஓர்கா திமிங்கலங்கள்: யானைகள் மற்றும் ஓர்கா திமிங்கலங்களின் கூட்டத்தில், வயது முதிர்ந்த பெண் விலங்கு தலைமைப் பொறுப்பில் இருக்கும். ஓர்கா திமிங்கலங்களின் ‘பாட்டிகள்’, இரை இருக்கும் இடத்தை நோக்கி தமது குழுவை அழைத்துச் செல்லும்.

மனிதர்கள் தந்தைவழிச் சமூகத்தைப் பின்பற்றி வாழ்வதைப்போல யானைகள் தாய்வழிச் சமூகத்தைப் பின்பற்றி வாழ்கின்றன. ஆண் யானைகள் வயதுக்கு வந்ததும் தனியாக வாழச் சென்றுவிடுவதால், பெண் யானைகளுக்கு ஆண் யானைகளுடன் பதவிச் சண்டை நடக்காது என்கிறார், யானைகள் குறித்துச் சுமார் 50 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்துவரும் செய்துவரும் சிந்தியா மோஸ்.

கழுதைப்புலிகள்: வேட்டையின்போது கழுதைப்புலி இனத்தில் ஆண்கள்தான் முன்னின்று தாக்கும். ஆனால் வேட்டையைக் கட்டுப்படுத்துவது பெண் கழுதைப்புலிகள்தன். தங்கள் குழு எங்கு வேட்டையாட வேண்டும் என்று வழிநடத்திச் செல்வது பெண் கழுதைப் புலிகளே. ஆண் கழுதைப்புலிகளை விட பெண் கழுதைப்புலிகள் உடல் வலிமை மிக்கவையாக இருக்கும். தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண் விலங்குகளிடம் முக்கியமாகக் கற்றுக்கொள்ள வேண்டியது, தமது சமூகக் குழுக்களில் இருப்பவர்களுடன் கூட்டணி அமைத்துக்கொள்வது. அதற்கான திறன், அனுபவமும் வயதும் கூடும்போது மேலும் அதிகரிக்கிறது.

பெண் விலங்குகள் கூட்டாக இணைந்து செயல்படும்போதுதான் பெண் தலைமை உருவாகிறது என்பது விலங்குகளைக் கண்காணிக்கையில் வெளிப்படுகிறது.

Kokila

Next Post

’இனி கூட்டணி கிடையாது’..!! ’யார் தயவும் எங்களுக்கு தேவையில்லை’..!! எடப்பாடி பழனிசாமி அனல் பறக்கும் பேச்சு..!!

Tue Oct 17 , 2023
அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுகவும் தேர்தலை சந்திக்க அதிரடியாக தயாராகி வருகிறது. பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகு அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு சிறுபான்மை கட்சிகளும் முன்வந்துள்ளன. இந்த கட்சிகள் மற்றும் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தோழமை கட்சிகள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டு மெகா கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதற்கான நடவடிக்கைகளை முடுக்கி […]

You May Like