fbpx

‘இந்தியன் 2’ ரிலிஸ் எப்போது?

இயக்குநர் ஷங்கர் உடன் கமல்ஹாசன் இரண்டாம் முறையாக இணைந்த திரைப்படம் ‘இந்தியன் 2’. 1996ஆம் ஆண்டு இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து,  இயக்குநர் ஷங்கர் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.  இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்

இந்தியன் -2 திரைப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.  படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களிலும் தேர்தல் முடிந்த பின் மே 24-ம் தேதி இந்தப் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Next Post

மிகவும் கவலைக்கிடமான நிலையில் தமிழ் பட நடிகை..!! ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் செலவு..!! சகோதரி அதிர்ச்சி தகவல்..!!

Thu Apr 4 , 2024
கேரளாவை சேர்ந்த மலையாள நடிகை அருந்ததி நாயர், தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘பொங்கி எழு மனோகரா’ என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ‘சைத்தான்’ படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து மலையாள படங்களில் கவனம் செலுத்தி வரும் அருந்ததி நாயர், கடந்த மாதம், தன்னுடைய சகோதரருடன் கோவளம் பைபாஸ் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் […]

You May Like