சென்னையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் புரமோஷன் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ள சிம்பு தனக்கு திருமணம் எப்போது ? என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.
கவுதம் வாசுதேவ்மேனன் உடன் இணைந்து அவர் இயக்கும் ’’வெந்து தணிந்தது காடு’’ திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகர் சிம்பு . இப்படம் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி வெளியாக உள்ளது. இன்னும் சில தினங்களே உள்ளதால் புமோஷன் குறித்த பணிகளில் பிசியாக இருக்கின்றார். இந்நிலையில் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் அவரது திருமணம்.. அவரது திருமணம் குறித்து சில மாதங்களுக்கு முன்பு சில விஷயங்கள் கிசுகிசுத்து வந்தன. இருந்தாலும் இது குறித்து அவர் அதிகாரப்பூர்வமாக எந்த இடங்களிலும் அவர் பேசவில்லை. இதனால் அவரே விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் , இதுவரை அதுபோன்ற தகவல்களை அவர் மனம் திறந்து பேசவில்லை.

ஒரு நல்ல கம்பேக்குக்கு பின்னர் கொடுத்த சிறந்த வெற்றி படம் தான் ’’மாநாடு ’’ இதையடுத்து அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்து வருகின்றார். மாநாடு 2 எடுக்க வாய்ப்புள்ளதாகவும் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரசிகர்களின் ஒரே எதிர்பார்ப்பான கேள்வி உங்கள் திருமணம் எப்போது? . என்பதுதான்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் கூறுகையில் , ’’ நல்ல பெண் அமையும் போது நான் திருமணம் செய்து கொள்வேன். சமீபகாலமாக சில தகவல்கள் உலாவருகின்றன. நான் அவரைக் காதலிக்கின்றேன். இவரை காதலிக்கின்றேன். , இவரை திருமணம் செய்து கொண்டேன், அவரை திருணம் செய்துகொண்டேன் என்றெல்லாம் கூறுகின்றனர். எனது 19வது வயதில் இருந்தே இது போன்ற விஷயங்களை நான் கேட்டுக் கொண்டே இருக்கின்றேன். எனது பெற்றோருக்கும் நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது. எனக்கு என்ன பயம் என்றால் நான் அவசரமாக திருமணம் செய்து கொண்டு அப்புறம் கருத்து வேறுபாடு சண்டை , விவாகரத்து என பிரச்சனைகள் வந்துவிடக் கூடாது என்கின்ற பயம்தான் , நல்ல பெண் அமையட்டும் நான் திருமணம் செய்து கொள்கின்றேன்…’’ என்றார்.