fbpx

இந்தாண்டு ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வுகள் எப்போது..? தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு..!!

ஆசிரியர் தேர்வு வாரியம் இந்தாண்டு நடத்த உள்ள தேர்வுகளின் உத்தேச கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆசிரியர் பணியிடங்களுக்கான TET தகுதித்தேர்வு ஜூலையில் நடைபெறும் என்றும் இதற்கான அறிவிப்பாணை ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 1,766 இடங்களுக்கான இரண்டாம் நிலை ஆசிரியர் பணிக்கான (SGT) தேர்வு குறித்த அறிவிப்பு இம்மாதம் வெளியிடப்படும் என்றும் ஏப்ரல் மாதம் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் இடங்களுக்கான உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் எனவும் இதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முதுநிலை ஆசிரியர்கள் பணிக்கு 200 இடங்கள் காலியாக இருப்பதாகவும், மே மாதம் இதற்கான அறிவிப்பு வெளியாகி, ஆகஸ்ட் மாதம் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்” என கூறப்பட்டுள்ளது.

Chella

Next Post

இதய நோயை விரட்டியடிக்கும் மீன் எண்ணெய் மாத்திரை.. என்னன்ன நன்மைகள் தெரியுமா. ?!

Wed Jan 10 , 2024
கொழுப்பு நிறைந்த மீன்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் திரவத்தையே மீன் எண்ணெய் மாத்திரையாக உபயோகப்படுத்தி வருகிறோம். ஒமேகா த்ரீ மற்றும் கொழுப்பு சத்துக்கள் இந்த மீன் எண்ணெய் மாத்திரையில் நிறைந்துள்ளன. இதனால் பல்வேறு நோய்களுக்கும் மீன் எண்ணெய் மாத்திரை அருமருந்தாக பயன்பட்டு வருகிறது. அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம். 1. மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது2. இதய ஆரோக்கியத்திற்கு மீன் எண்ணெய் மாத்திரை முக்கிய பங்கு வகிக்கிறது.3. நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு […]

You May Like