fbpx

கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! புதிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி..!! தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

டிஎன்பிஎஸ்சியின் குரூப் 2 தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், 105 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நவம்பர் 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்று நாட்கள் தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

இந்த தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் தற்போது தொடங்கியுள்ளதாகவும், செப்டம்பர் 28ஆம் தேதி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்த முழு விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், விண்ணப்பம் தொடர்பான விவரங்கள் விண்ணப்பம் செய்ய கடைசி தேதி மற்றும் அனைத்து விவரங்களும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : எனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து புகாரளித்தேன்.!! நடிகர் சங்கம் ஒன்னுமே செய்யல..!! நடிகை விசித்ரா பகீர் தகவல்..!!

English Summary

Tamil Nadu Public Service Commission has announced the exam date for TNPSC Group 2 Technical Posts.

Chella

Next Post

தனியார் கல்லூரியில் 500 போலீசார் அதிரடி சோதனை... சிக்கிய போதை பொருள்.. 30 மாணவர்கள் கைது..!

Sat Aug 31 , 2024
Circulation of narcotics, including ganja, in the male and female hostels around SRM Private College

You May Like