fbpx

ORS கரைசலை எப்போதெல்லாம் அருந்தலாம்?… வீட்டிலேயே எப்படி தயாரிப்பது?

ORS: ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் ஓஆர்எஸ் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய வேண்டும் என சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, ஓஆர்எஸ் எனப்படும் உப்பு சர்க்கரை கரைசலை பருக வேண்டும்.

ஏனெனில், இத்திரவம் அதிகப்படியான வியர்வையினால் ஏற்படும் தாது உப்பு இழப்பினை சமன்படுத்த சோடியம் பொட்டாசியம் போன்ற தாது உப்புகளை கொண்டுள்ளது. அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நல வாழ்வு மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ORS – உப்பு சர்க்கரை கரைசல் மக்களுக்கு வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அந்தவகையில், ஓஆர் எஸ் கரைசலை கோடைக்காலங்களில் ஏற்படும் நீர் வறட்சியை தடுக்க இதனை அருந்தலாம். ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்றாற்போல, ORS கரைசலை எடுத்துக் கொள்ளும் அளவு மாறுபடும். இரண்டு வயது குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு அரை லிட்டர் வரை ORS பானம் கொடுக்கலாம். 2 முதல் 9 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 1 லிட்டர் ORS கரைசல் கொடுக்கலாம்.

வாந்தி, வயிற்றுப்போக்கு எனத் திடீரென ஏற்படும் உடல் உபாதைகளால் உடனடியாக உடலில் குறைவது, நீர்ச்சத்து. நீர்ச்சத்து குறைவதால் பலவிதமான பிரச்னைகள் ஏற்படும் என்பதால், அதை சமன் செய்ய உடனடியாக ORS கரைசல் பருகுவது அவசியம். குறிப்பாக, குழந்தைகளுக்கு நீர் இழப்பு ஏற்படும் நேரங்களில், உப்பு – சர்க்கரை கரைசலான இந்த ORS கரைசல் உடனடியாகக் கொடுக்கப்பட வேண்டும்.

மருந்தகங்களில் கிடைக்கும். அதை வாங்கிப் பருகலாம். அல்லது, வீட்டிலேயே எளிய முறையில் அதைத் தயார் செய்யலாம். அது எப்படி என்று இங்கு பார்ப்போம். முதலில், கைகளை நன்றாக சோப் போட்டு கழுவ வேண்டும். அதேபோல, கரைசல் தயார் செய்யவிருக்கும் பாத்திரத்தையும் சுத்தமாகக் கழுவி வைத்துக்கொள்ள வேண்டும்.

சுத்தமான தண்ணீர் – 1 லிட்டர், சர்க்கரை – 6 டீஸ்பூன்(1 டீஸ்பூன் = 5 கிராம்), தூள் உப்பு – அரை டீஸ்பூன் என இந்த அளவுகளில் எடுத்து, அனைத்தையும் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும். நீர்ச்சத்து இழப்புக்கு ஆளானவருக்கு இதை அடிக்கடி பருகக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். கரைசல் தயாரித்த 24 மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். தேவைப்பட்டால், இதே முறையில் புதிய கரைசல் தயாரித்துக்கொள்ள வேண்டும். கரைசலில் பரிந்துரைக்கு அதிகமாகக் கூடுதல் சர்க்கரை சேர்க்க வேண்டாம்.

கரைசல் தயாரிக்க தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பால், பழச்சாறு, குளிர்பானங்களை எல்லாம் பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்றாற்போல, ORS கரைசலை எடுத்துக்கொள்ளும் அளவு மாறுபடும்.

இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு அரை லிட்டர் வரை ORS பானம் கொடுக்கலாம். 2 முதல் 9 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 1 லிட்டர் ORS கரைசல் கொடுக்கலாம்.10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 3 லிட்டர் ORS கரைசல் அருந்தலாம்.

Readmore: கோடையில் குளுகுளு.. வெறும் 500 ரூபாயில் மினி ஏசி.. கரண்ட் பில் கவலையில்லை.. இதோ விவரம்..!

Kokila

Next Post

இன்று உலக நடன தினம்!… தமிழர்களின் பரதநாட்டிய சுவாரஸ்யம்!

Mon Apr 29 , 2024
World Dance Day: ஆண்டுதோறும் ஏப்ரல் 29 ஆம் தேதி உலக நடன தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1982 ஆம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனத்தின் கலாச்சார ஊக்குவிப்பின் கீழ் சர்வதேச நடன சபை International Dance Council (CID) ஏற்படுத்தப்பட்டது. கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இச்சபையின் மூலமாகவே உலக நடன தின ஏற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இது, நடனக் கலைஞர் ஜான் ஜார்ஜ் நூவர் என்பவரின் […]

You May Like