fbpx

புதிய மண் பானையை பயன்படுத்துவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

நாம் புதிய மண்பானையை வாங்கும்போது அதை, உடனே பயன்படுத்தக் கூடாது. சுத்தம் செய்துதான் பயன்படுத்த வேண்டும்.

அப்படி புதிய மண்பானையை எப்படி சுத்தம் செய்யலாம் என்பது தொடர்பான விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

1) புதிய மண் பானையை வெளிப்புறத்தில் நன்றாகக் கழுவ வேண்டும். பானையின் உள்பக்கத்திலும் கழுவக் கூடாது.

2) முதலில் பானையில் தண்ணீர் ஊற்றி ஒரு நாள் முழுவதும் வைத்து விட வேண்டும்.

3) பிறகு பானையை எடுத்து நிழலில் காய வைக்க வேண்டும். பிறகு பானையில் நீர் ஊற்றி வைக்க வேண்டும். சில மணிநேரத்திற்கு ஒரு முறை நீரை மாற்ற வேண்டும்.

4) அரிசி கழுவிய நீரை ஊற்றி 2 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். அல்லது கல் உப்பு சேர்த்த நீரைப் பானையில் ஊற்றி அரை நாள் வரை ஊற வைக்க வேண்டும்.

5) தொடர்ந்து மூன்று நாள்கள் வரை சாதாரண நீர், உப்பு நீர் மற்றும் அரிசி கழுவிய நீர் போன்றவற்றை ஊற்ற வேண்டும்.பிறகு பானையைக் காய வைத்து நன்றாக உலர்ந்த பிறகு குடிநீரை ஊற்றி பயன்படுத்த தொடங்கலாம்.

முக்கியமாக விஷயம் என்னவென்றால் பானையை வெயிலில் காய வைக்கக் கூடாது.அதிகப்படியான வெப்பத்தினால் பானையில் விரிசல் விழுவதற்கான வாய்ப்புகள் உண்டு.பானையை பயன்படுத்தும் போது, தரையில் வைக்காமல், சிரமப்படாமல் கொஞ்சம் மணல் அள்ளி வந்து அதனைக் கொட்டி குவித்து, அதன் மேல் பானையை வைத்தால் சிறப்பு. அதோடு சுத்தமான துணியை நன்றாகத் தண்ணீரில் நனைத்து பானையின் மீது சுற்றி விடலாம். இப்படிச் செய்வதால் மண் பானையின் நீரானது கூடுதல் குளிர்ச்சியைத் தரும். மறக்காமல் பானையை மூடி வைக்க வேண்டும்.

Read More: மனைவிகளை விருந்தினர்களுக்கு விருந்தாக்கும் வினோத கிராமம்! எங்க இருக்கு தெரியுமா?

Rupa

Next Post

TTF Vasan Arrest: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது…! விடாது துரத்தும் வில்லங்கம்..!

Thu May 30 , 2024
Popular YouTuber TTF Vasan Arrested...! The monster that does not let go..!

You May Like