fbpx

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்..?? இந்திய வானிலை ஆய்வு மையம் சொன்ன முக்கிய தகவல்..!!

வடகிழக்கு பருவமழை வரும் 20ஆம் தேதி தொடங்கும் என வெளியான தகவல் உண்மையில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கமளித்துள்ளது.

இந்தாண்டு வடகிழக்கு பருவமழைக்கான நீண்ட கால வானிலை முன்னறிவிப்பினை கடந்த 30ஆம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்தது. இதற்கிடையே, வடகிழக்கு பருவமழை வரும் 20ஆம் தேதி தொடங்கும் என தகவல் ஒன்று கசிந்தது. இது தவறான தகவல் என இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் மொகபத்ரா விளக்கமளித்துள்ளார். இந்திய வானிலை ஆய்வு மையம் இது போன்ற ஒரு தகவலை வெளியிடவில்லை என்றும் தற்போது மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தென்மேற்கு பருவமழை வெளியேறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்..?? இந்திய வானிலை ஆய்வு மையம் சொன்ன முக்கிய தகவல்..!!

காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு பிறகு வானிலை நிகழ்வை பொறுத்து தென்மேற்கு பருவமழை வெளியேறும். அதன் பின்னரே வடகிழக்கு பருவமழை தொடங்கும். எனவே, வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பதனை தற்போது சொல்ல முடியாது என்றும் இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் மொகபத்ரா தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

மகிஷாசூரன் சிலைக்கு பதில் மகாத்மா காந்தி சிலை வைக்கப்பட்டதால் பரபரப்பு….

Mon Oct 3 , 2022
மேற்குவங்க மாநிலத்தில் துர்காதேவி சிலைக்கு கீழே மகிஷாசூரன் சிலையை வைப்பதற்கு பதில் மகாத்மா காந்தியின் சிலை வைக்கப்பட்டதால் சர்ச்சை கிளம்பியுள்ளது. மேற்கு வங்க மாநில் கல்கத்தாவில் இந்திய இந்து மகாசபைசார்பில் துர்கா பூஜை கொண்டாடப்பட்டது. இதற்காக துர்கா சிலை அலங்காரம் செய்யப்பட்டு அழகான அமைப்பில் வைக்கப்பட்டது. சிலையின் காலுக்கு கீழே மகிஷாசூரன் சிலைக்கு பதிலாக மகாத்மா காந்தி சிலை வைக்கப்பட்டிருந்தது. இதனால் சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் […]

You May Like