கொரோனா பரவத் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.. 2வது அலை, 3-வது அலை, 4-வது அலை என அச்சுறுத்திக் கொண்டே தான் இருக்கிறது… இதனால் கொரோனா தொற்று எண்ணிக்கை அவ்வப்போது குறைவதும் மீண்டும் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. மேலும் சராசரியாக 4 மாதங்களுக்கு ஒருமுறை கொரோனாவின் புதிய மாறுபாடுகள் உருவாகி வருகிறது.. ஆனால் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நோய்க்கான முன்னறிவிப்பு அறிக்கை செய்யப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? உலகம் இந்த நோயிலிருந்து விடுபடும் என்றும் சீன தீர்க்கதரிசி ஒருவர் கணித்துள்ளாராம்..

சீனாவின் நாஸ்ட்ராடாமஸ் என்று அறியப்படும் லியு போவென் கொரோனா பரவல் குறித்தும் அதன் முடிவு குறித்தும் கணித்துள்ளாராம்.. அவரின் இந்த கணிப்பு தற்போது உலகம் முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதாவது எலி மற்றும் பன்றியின் ஆண்டுகளுக்கு இடையில் ஏற்படும் நோய்த்தொற்று ஒரு பயங்கரமான பேரழிவை ஏற்படுத்தும் என்று கணித்துள்ளாராம்.. இந்த கணிப்பு கொரோனா வைரஸின் தோற்றத்துடன் ஒத்துப்போகிறது என்றும், இது 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பன்றி மற்றும் எலியின் கொரோனா பரவத் தொடங்கியது என்றும் சிலர் கூறுகின்றனர்..
சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு விலங்கால் அடையாளப்படுத்தப்படுகிறது.. 2019 பன்றியின் ஆண்டாக இருந்தது.. அதே போல் 2020-ம் ஆண்டு எலியின் ஆண்டாக கருதப்பட்டது.. மேலும் “நாகம் மற்றும் பாம்புகளின் ஆண்டுகளில் அனைத்தும் கடந்து செல்லும்” என்று அவர் கணித்துள்ளாராம்.. அதாவது இது 2024 மற்றும் 2025 வரை கொரோனா பாதிப்பு இருக்குமாம்.. சீனாவில் 2024 நாக ஆண்டாகவும், 2025 ஆம் ஆண்டு பாம்பு ஆண்டாகவும் சொல்லப்பட்டுள்ளது. எனவே 2024 அல்லது 2025-க்கு பிறகே கொரோனா முடிவுக்கு என்று கணித்துள்ளாராம்.. எனினும் அவரின் கணிப்பு எந்தளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..