fbpx

மாணவர்களுக்கு இலவச லேப்டாப் எப்போது..? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்..!!

தமிழ்நாடு அரசின் சார்பாக 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கொரோனா காரணமாக லேப்டாப் உற்பத்திக்கு தேவையான உதிரி பாகங்கள் உலக அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்திற்கு ஏற்கனவே பங்கேற்ற லேப்டாப் தயாரிப்பு நிறுவனங்கள், தொடர்ந்து இலவச லேப்டாப் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை.

இதன் எதிரொலியாக 2019ஆண்டு முதல் கடந்த 3 ஆண்டுகளாக மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படாமல் இருப்பதால் மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் கழிவறைகளை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். கோவை தொண்டைமுத்தூர் பள்ளியில் ஆய்வு செய்த அவர், மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, பள்ளியின் பராமரிப்பு எப்படி உள்ளது என்பதை கழிவறை காட்டி கொடுத்து விடும். நிதிச்சுமை கலையப்பட்ட பின்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

Chella

Next Post

6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்து..!! 5 பேரின் உடல்கள் மீட்பு..!! எவரெஸ்ட் சிகரத்தை ரசிக்க சென்றபோது விபரீதம்..!!

Tue Jul 11 , 2023
நேபாள நாட்டில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு டைட்டானிக் கப்பலை பார்க்கச் சென்றவர்கள் தண்ணீரில் மூழ்கி ஜலசமாதியாகினர். நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியதில் 5 பேர் உயிரிழந்தனர். அந்த சோகம் மறைவதற்குள் இப்போது ஹெலிகாப்டர் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டு அதில் பயணம் செய்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். சாகச பயணம் செய்ய வேண்டும் […]

You May Like