fbpx

அதிவேக 5G சேவை இந்தியாவில் எப்போது கிடைக்கும்..? ஸ்பெக்ட்ரம் ஏல விவரங்கள் இதோ…

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிவேக இணையத்திற்கான 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்குப் பிறகு, நாட்டில் உள்ள சாமானியர்களுக்கு 5ஜி எப்போது கிடைக்கும் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.. இந்த நிலையில் நாட்டில் ​​5ஜி சேவையை வெளியிடுவதற்கான தேதியை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 2022 இல் இந்தியாவில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தை நேற்று வெற்றிகரமாக முடித்தது..

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் உள்ளிட்ட நான்கு நிறுவனங்களின் ஏலத்தில் 1.50 லட்சம் கோடி ரூபாய்க்கு அலைக்கற்றைகள் ஏலம் விடப்பட்டுள்ளது.. 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மொத்த 5ஜி அலைக்கற்றைகளில் 71 சதவீதம் – 72,098 மெகா ஹெர்ட்ஸ் இல் 51,236 மெகா ஹெர்ட்ஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது..” என்று தெரிவித்தார்..

மேலும் பேசிய அவர், ஏலதாரர்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் செய்யப்படும் என்றும், இந்த ஆண்டு அக்டோபரில் நாட்டில் 5ஜி சேவைகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார். தற்போது நடைபெற்று வரும் 5ஜி அலைக்கற்றை ஏலம், நாட்டின் தொலைத்தொடர்புத் துறை 5ஜி முன்னேற்றத்தில் நீண்ட தூரம் வந்துள்ளது என்பதைக் குறிக்கிறது என்றும் அவர் கூறினார்.

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அரசு பெற்ற மொத்த மதிப்பான ரூ.1,50,173 கோடியில் 58.65 சதவீதத்தை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் ரூ.88,078 கோடி மதிப்பிலான ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த 5ஜி ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோவுக்குப் பிறகு, ஏர்டெல் நிறுவனம் 2-வது இடத்தில் உள்ளது.. 5ஜி அலைவரிசையில் 19867.8 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையைப் பெறுவதற்கு ரூ. 43,084 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது..

பார்தி ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில், “5ஜி ஏலத்தின் முடிவுகளால் ஏர்டெல் மகிழ்ச்சியடைந்துள்ளது. சமீபத்திய ஏலத்தில் இந்த ஸ்பெக்ட்ரம் கையகப்படுத்தல், எங்களின் போட்டியுடன் ஒப்பிடும் போது கணிசமான குறைந்த செலவில் சிறந்த ஸ்பெக்ட்ரம் சொத்துக்களை வாங்குவதற்கான திட்டமிட்ட உத்தியின் ஒரு பகுதியாகும்..” என்று குறிப்பிட்டுள்ளார்..

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5G சேவை, மூலம் அதிவேக இணைப்பை வழங்குவதாக உறுதியளிக்கிறது… எனினும் 4ஜியை விட 5ஜி நெட்வொர்க்கின் கட்டணம் கணிசமாக அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Maha

Next Post

பரந்தூரில் புதிய விமான நிலையம்..! அப்படினா மீனம்பாக்கம் விமான நிலையத்தின் நிலை என்னவாகும் தெரியுமா?

Tue Aug 2 , 2022
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதால், மீனம்பாக்கம் விமான நிலையத்தின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். இந்நிலையில், புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டால், தற்போது செயல்பட்டு வரும் மீனாம்பாக்கம் விமான நிலையத்தின் நிலை என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் […]

You May Like