fbpx

பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000 எப்போது கிடைக்கும்..? கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் சொன்ன குட் நியூஸ்..!!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ் மக்களால் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும் திருவிழா என்றால் பொங்கல் பண்டிகை தான். இந்த பொங்கலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி, சேலைகள் மற்றும் பணம் வழங்கப்படுவது வழக்கம்.

அதன்படி, 2024ஆம் ஆண்டு பரிசு தொகுப்பாகத் குடும்ப அட்டைத் தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1,000 வழங்கப்பட்டது. இந்நிலையில், 2025 பொங்கல் பண்டிகைக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நாகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன், “பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்களுக்கு முன்பாகவே பொதுமக்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Read More : இனி ரேஷன் கார்டு தொலைந்துவிட்டாலோ, சேதம் அடைந்தாலோ கவலைப்பட வேண்டாம்..!! இந்த செயலி இருந்தால் பொருட்களை வாங்கலாம்..!!

English Summary

Additional Chief Secretary Radhakrishnan has released important information regarding the distribution of Pongal gift packages.

Chella

Next Post

"அம்பேத்கர் என்றால் பிளவர் அல்ல ஃபயர்"..!! அமைச்சர் அன்பில் மகேஷ் பரபரப்பு பேச்சு..!!

Mon Dec 23 , 2024
School Education Minister Anbil Mahesh has said that Ambedkar means fire, not flower.

You May Like