fbpx

வீட்டு கடனை கட்டி முடித்த பின் உங்கள் கைக்கு எப்போது பத்திரம் கிடைக்கும்..? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய அறிவிப்பு..!!

பொதுவாகவே வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் பத்திரத்தில் எப்போது ஆவணங்கள் கொடுக்கப்படும் என்ற விவரங்களை குறிப்பிட்டிருக்கும். அதை முழுமையாக மக்கள் படித்து அதன் பின்பு கையெழுத்திட வேண்டும். இதை பலரும் செய்ய மறப்பது இயல்பான ஒன்றாகவே ஆகிவிட்டது. ஆனால், உண்மையில் இது தான் வீட்டு பத்திரங்களை பெறுவதற்கான முக்கிய கண்டிஷனாக உள்ளது.

ரிசர்வ் வங்கி விதிகள் படி, வங்கிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட அனைத்து நிதி நிறுவனங்களும் கடன் பத்திரத்தில் அசல் சொத்து ஆவணங்கள் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு மற்றும் இடம் ஆகியவை குறிப்பிட வேண்டும். குறித்த தேதியில் அல்லது குறித்த காலக்கட்டத்தில் ஆவணங்களை வங்கி நிர்வாகம் அதன் வாடிக்கையாளரிடம் கொடுக்காதது குறித்து ஆர்பிஐ கவனத்திற்கு சென்றுள்ளது.

இதையடுத்து, ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடனுக்கான தொகையை முழுமையாக திருப்பிச் செலுத்தி அல்லது செட்டில் செய்த 30 நாட்களுக்குள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரிஜினல் ஆவணங்கள் உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இல்லையென்றால், ஒவ்வொரு நாள் தாமதத்திற்கும் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கும் புதிய விதிமுறை டிசம்பர் 1, 2023 முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், கடன் வாங்குபவர் அல்லது கூட்டுக் கடன் வாங்குபவர்களின் துரதிர்ஷ்டவசமாக மரணம் போன்ற நிகழ்வு நடந்தால் அதை சரி செய்ய வங்கி மற்றும் பதிவு செய்யப்பட்ட நிதி அமைப்புகள் அசல் சொத்து ஆவணங்களை சட்டப்பூர்வ வாரிசுகளுக்குத் திருப்பித் தருவதற்கு நன்கு வரையறுக்கப்பட்ட நடைமுறையை உருவாக்க வேண்டும். மேலும், இந்த நடைமுறையை வங்கி வாடிக்கையாளர் எளிதாக தெரிந்துக்கொள்ள இது தொடர்பான அனைத்து கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுடன் இணையதளங்களில் பதிவிடப்பட்டு எப்போது வேண்டுமானாலும் அணுக்க கூடியதாக இருக்க வேண்டும்.

வங்கி பாதுகாப்பில் இருக்கும் ஒரிஜினல் சொத்து ஆவணங்களின் இழப்பு அல்லது சேதம் அடையும் பட்சத்தில், இந்த ஆவணங்களின் நகல் அல்லது சான்றளிக்கப்பட்ட நகல்களைப் பெறுவதற்கு வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் உதவ கடமைப்பட்டுள்ளது. இது தொடர்பான செலவுகளையும் வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது போன்ற சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலாக இழப்பீடு செலுத்த வேண்டும். மேலும், ஆவணங்களின் நகல் அல்லது சான்றளிக்கப்பட்ட நகல்களைப் பெறுவதற்கு 30 நாட்கள் கூடுதல் நேரம் கிடைக்கும். கூடுதல் தாமதத்திற்கு கூடுதல் அபராத தொகை வங்கிகள் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

Chella

Next Post

அரசின் திட்டம் குறித்து தவறான தகவல்..!! பிரபல செய்தி சேனல், எடிட்டர் மீது வழக்குப்பதிவு..!!

Wed Sep 13 , 2023
தவறான தகவல்களை மக்களிடத்தில் பரப்பியதாக பிரபல செய்தி சேனல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கான மாநில அரசின் வணிக வாகன மானியத் திட்டம் குறித்து தவறான தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் பிரபல இந்தி செய்தி சேனல் மற்றும் அதன் ஆலோசனை ஆசிரியர் மீது கர்நாடக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. Aaj Tak செய்தி சேனல் மற்றும் அதன் ஆலோசனை ஆசிரியருக்கும் எதிராகவும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 505 […]

You May Like