fbpx

புளூடூத் பெயர், லோகோ எங்கிருந்து வந்தது! அதன் அர்த்தம் என்ன?… யார் கண்டுபிடித்தது தெரியுமா?

புளூடூத் பெயர், லோகோ எங்கிருந்து வந்தது! அதன் அர்த்தம் என்ன?… யார் கண்டுபிடித்தது என்பது குறித்த பல சுவாரஸியமான தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

”ஹரால்ட் ப்ளூடூத் கோர்ம்சன்” (Harald Bluetooth Gormsson), இவர் டென்மார்க் மற்றும் நார்வேயின் அரசர். ரூனிக் ஹரால்ட்ர் குனுக் என்பது இவரின் மற்றொரு பெயர். இவரது ஆட்சிக் காலமானது கிபி 958. மிகவும் குறைந்த ஆட்சி காலமே இவர் அரசாண்டு இருக்கிறார் என்றபோதிலும், அக்காலகட்டத்திற்குள்ளேவும் டென்மார்க் மற்றும் நார்வேயை ஒன்றிணைத்திருக்கிறார் இவர். இவரது புனைப்பெயர் ப்ளூடூத் என்றும் ப்ளாக்டூத் என்றும் சொல்லப்படுகிறது. அரசர் ப்ளூடூத் மிகவும் குறுகிய காலத்தில் டென்மார்க்கையும் நார்வேயையும் இணைத்தது போலவே… ப்ளூடூத் தொழில்நுட்பம் பல்வேறு மின்னணு சாதனங்களை குறுகிய காலத்தில் ஒன்றிணைக்கிறது. அதனாலேயே அறிவியல் விஞ்ஞானிகள் இந்த தொழில் நுட்பத்திற்கு ப்ளூடூத் என்று பெயரிட்டுள்ளனர்!

இவரின் பற்கள் பார்ப்பதற்கு மிகவும் மோசமடைந்து கருநீல நிறத்தில் இருக்குமாம். அதனாலேயே இவருக்கு இப்பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. இவரின் பற்கள் இந்த அளவு மோசமானதற்கு காரணம் அவுரிநெல்லி (Blueberry) என்கிறார்கள். ஆம் அவுரிநெல்லி என்றால் அவருக்கு மிகவும் பிடிக்குமாம். அதை விடாது சாப்பிட்டு வந்ததால் இவரின் பற்கள் கரைபடிந்து நீலநிறத்தை பெற்றதாக வரலாற்று ஆய்வாளார்கள் கூறுகின்றனர். இதுவொரு புறமென்றால், ப்ளூடூத்தில் இருக்கும் லோகோவானது, Hagall (*) மற்றும் Bjarkan (B) என்ற அவர் பெயரின் இனிஷியலை குறிக்கின்றன. இவை ரூனிக் குறியீடும்கூட! இவற்றை இணைத்து தான் ப்ளூடூத்தின் லோகோவானது உருவாக்கப்பட்டுள்ளதாம்.

Kokila

Next Post

திமுக மாவட்ட நிர்வாகியின் பேனரை கிழித்த விவகாரத்தில்…..! திமுக பெண் கவுன்சிலரின் கணவர் அதிரடி கைது…..!

Mon Jul 17 , 2023
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தனி முன் அன்சாரி (37) இவர் சென்னை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு தலைவராக இருக்கிறார். அதோடு, பழைய வண்ணாரப்பேட்டை எம்சி ரோடு ஜி ஏ ரோடு வட்டார வியாபாரிகள் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அத்துடன் இவருக்கு சமீபத்தில் தான் திமுக தலைமை மாவட்ட அளவிலான பொறுப்பு வழங்கி இருந்தது. இதற்கு வாழ்த்து தெரிவித்து அவருடைய ஆதரவாளர்கள் அந்த […]

You May Like