Giant ocean: பூமியின் நீரின் மூலத்தைக் கண்டறிய ஆய்வு செய்த விஞ்ஞானிகள், பூமிக்கடியில் 700கிமீ ஆழத்தில் ராட்சத பெருங்கடலை கண்டுபிடித்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூமிக்கு நீர் எங்கிருந்து வந்தது என்றால், வால்மீன் தாக்கங்கள் மூலம் நீர் பூமிக்கு வந்தது என்று ஒரு கோட்பாடு நம்பப்பட்டு வருகிறது. இந்தநிலையில், அமெரிக்காவின் இல்லினாய்ஸில் உள்ள எவன்ஸ்டன் நகரில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நிலத்தடி நீர் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், பூமிக்கடியில் 700கிமீ ஆழத்தில் ராட்சத பெருங்கடலை கண்டுடித்துள்ளனர். இது பூமியின் மேற்பரப்பில் இருக்கும் அனைத்து கடல்களையும் விட 3 மடங்கு ராட்சத பெருங்கடல் என்றும் இந்த பெருங்கடல் ரிங்வுடைட்(Ringwoodite) எனப்படும் நீல நிற பாறைக்குள் மறைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கு தலைமை வகித்த விஞ்ஞானி ஸ்டீவன் ஜேக்கப்சன் கூறுகையில், ‛‛நாம் வாழும் பூமிக்கு தண்ணீர் எப்படி வந்தது? இதற்கான விடை என்பது பூமிக்கடியில் இருந்து வந்தது என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆராய்ச்சி அமைந்துள்ளது. இதற்கான வலுவான ஆதாரத்தை இந்த ஆய்வு காட்டுகிறது’ என்றார்.
மேலும், பூமிக்கடியில் நிகழும் மாற்றங்களை அறிய நிலநடுக்கங்களை பற்றிய ஆய்வும் செய்யப்பட்டது. 2000 நிலநடுக்கங்களின்போது ஏற்பட்ட 500 நிலஅதிர்வுகளின் அலைகளை ஆராயப்பட்டன. அப்போது நிலநடுக்கம் பூமிக்கடியில் மையம் கொண்டுள்ள தூரத்தை பொறுத்து அதிர்வுகளின் அலைவேகம் என்பது மாறுபட்டது. இந்த அலைவேக மாறுபாட்டை ஆய்வு செய்தபோது பூமிக்கடியில் ஈரமான பாறைகள் இருப்பதும், ஆழம் செல்ல செல்ல அதன் அலைவேக மாறுபாடு குறைந்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டதுள்ளது. இது தான் பூமியின் மேற்பரப்பில் உள்ள கடல் அளவை விட 3 மடங்கு பெரிய கடல் மறைந்துள்ளதை கண்டுபிடிக்க உதவியது’’ என்றார். முன்னதாக இந்த ஆய்வு குறித்த விபரம் 2014ம் ஆண்டில் Dehydration melting at the top of the lower mantle என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Readmore: Note: e-kyc அப்டேட் செய்யாதவர்களுக்கு ரேஷன் பொருள் கிடையாதா…? உண்மை என்ன…?