மராட்டிய மாநிலம் புனேவின் யெவலேவாடி பகுதியை சேர்ந்த19 வயது இளம் பெண் கடந்த 17-ஆம் தேதி சோமாட்டோ மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். இரவு 9.30 மணியளவில் சோமாட்டோ டெலிவரி ஊழியர் ரயீஸ் ஷேக் (40) என்பவர் உணவு டெலிவரி செய்ய சென்றுள்ளார். உணவு டெலிவரி செய்த பின் நன்றி என்று கூறி அந்த பெண்ணின் கன்னத்தில் இரண்டு முறை முத்தமிட்டு உள்ளார்.
மேலும் அந்த பெண்ணிடம் தண்ணீர் கேட்டார். அந்த பெண் அவருக்கு தண்ணீர் கொடுத்ததும், அவர் அந்த பெண்ணை அருகில் இழுத்து துன்புறுத்தி இருக்கிறார். தொடர்ந்து அந்த ஊழியர் அந்த பெண்ணிடம் நான் உன் மாமாவைப் போன்றவர் என்றும், உணக்கு ஏதாவது வேண்டும் என்றால் கேட்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் தண்ணீர் கேட்டு பெண்ணை துன்புறுத்து இருக்கிறார். உடனடியாக அந்த பெண் உதவி கேட்டு சத்தம் போபோட்டுள்ளார் உடனே ரயீஸ் தப்பி ஓட முயன்றார், ஆனால் வீட்டு வசதி சங்கத்தைச் சேர்ந்த சிலர் அவரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஐபிசி 354 மற்றும் 354 ஏ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டு உள்ளார்.