விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஜோதி பாஸ்கர் வயது 50. இவர் சங்கரன்கோவிலில் உள்ள ஓட்டல் ஒன்றில் சமையல் மாஸ்டராக பணி புரிந்து வந்திருக்கிறார். இந்நிலையில் இவர் நேற்றைய தினம் வேலைக்காக ஸ்ரீவில்லிபுத்தூறில் இருந்து தனியார் பேருந்து மூலம் சங்கரன்கோவிலுக்கு சென்றுகொண்டிருந்த போது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. நெஞ்சுவலி காரணமாக துடித்த அவர்பார்த்த சக பயணிகள் இது குறித்து அந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து வலியால் துடித்து கொண்டிருந்த ஜோதி பாஸ்கரை பேருந்தில் இருந்து, பாதி வழியிலேயே இறக்கிவிட்டு சென்றுள்ளனர். மயக்கநிலையில் பெரியவர் இருப்பதை கண்ட அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் ஜோதி பாஸ்கரை பரிசோத்தித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரக்கமில்லாமல் வலியால் துடித்தவரை பாதியிலேயே விட்டு விட்டு சென்றதால் அவரது உயிரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.