fbpx

விஜய்யின் முதல் மாநாட்டில் மனைவி சங்கீதா எங்கே..? அப்படினா அந்த விஷயம் உண்மையா..? வெளியான பரபரப்பு தகவல்..!!

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நேற்று (அக்.27) விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் மகன், மகள் ஆகியோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் யாருமே வரவில்லை.

நடிகர் விஜய், 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கின்றனர். சங்கீதா சினிமா துறையைச் சார்ந்தவர் இல்லை என்றாலும் கூட விஜய்யின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார். விஜய்யின் பட நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும் சங்கீதா கலந்து கொள்வார். ஆனால், விஜய்யின் சினிமா சார்ந்த எந்த விழாக்களிலும், கடந்த சில ஆண்டுகளாகவே, சங்கீதா மற்றும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா உள்ளிட்டோர் பங்கேற்பதில்லை.

இது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்து வந்தன. விஜய்யின் மனைவி சங்கீதா தனது மகன் மற்றும் மகளுடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். அதனால் தான் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வர முடியவில்லை என்றெல்லாம் செய்திகள் வந்தன. மாறுபட்ட சில தகவல்களும் வெளியாகி வந்தன. இந்நிலையில், புதிய அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள விஜய்யின் முதல் மாநாட்டில் அவர்கள் பங்கேற்பார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற தவெக மாநாட்டிற்கும் சங்கீதாவோ, விஜய்யின் பிள்ளைகளோ யாரும் வரவில்லை. அண்மையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம் மறைவுக்கு, சங்கீதா சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார். ஆனால், சங்கீதா விஜய்யின் அரசியல் மாநாட்டுக்கு வராதது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இந்த மாநாட்டுக்கு விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ சந்திரசேகர் – ஷோபா சந்திரசேகர் ஆகியோர் வந்திருந்தனர். விஜய்யை பேச அழைத்ததும், மேடையில் இருந்து கீழே இறங்கிய விஜய், தனது தாய் தந்தை இருந்த இடத்திற்கு சென்று அவர்களிடம் ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Read More : ஷாக்!. இருமடங்காக உயர்ந்த தங்கம் விலை!. தீபாவளிக்குள் ரூ.1 லட்சத்தை எட்டும்?. நிபுணர்கள் கூறுவது என்ன?

English Summary

While Vijay’s wife Sangeeta and son and daughter were expected to attend the conference, none of them turned up.

Chella

Next Post

குட்நியூஸ்!. 70 வயதை கடந்த அனைவருக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச காப்பீடு!. பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

Mon Oct 28 , 2024
PM Modi To Launch Ayushman Bharat Health Coverage For Citizens Aged Over 70 On Oct 29

You May Like