திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் முக.ஸ்டாலின், “எல்லா தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற எண்ணம்தான் இருக்க வேண்டும்” என்று பேசினார்.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேசுகையில், ”எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும். எல்லா தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற எண்ணம்தான் இருக்க வேண்டும். தனிப்பட்ட விருப்பு, வெறுப்பை கடந்து தமிழ்நாட்டின் நலன் தான் முக்கியம். தோழமை கட்சிகளை இணைத்து தேர்தல் பணிக்குழுக்களை அமைக்க வேண்டும்” என்று பேசினார்.
முன்னதாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை முதல்வர் முக.ஸ்டாலின் வெளியிட்டார். திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் தேர்தல் அறிக்கையை வடிவமைத்து இருந்தனர். இதனை அடுத்து, இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. நண்பகல் 12 மணியளவில் காணொலி வாயிலாக இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேர்தல் பிரசாரம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
Read More : சொத்து பத்திரத்தில் பிழையா..? அசால்ட்டா விட்றாதீங்க..!! மிகப்பெரிய சிக்கல்..!! உடனே இதை பண்ணுங்க..!!