இந்தியாவை பொறுத்தவரை பல்வேறு நிறுவனங்கள் எலக்ட்ரிக் பைக்கை தயாரித்து வரும் நிலையில், அந்த வாகனங்களில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், தீவிபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும், ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக்குகள் தீப்பிடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்தவகையில், ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதாவது சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது எலக்ட்ரிக் பைக்கின் முன்பகுதி பார்ட் பார்ட்டாக ரோட்டில் கழண்டு விழுந்ததாக பயனர் ஒருவர் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த அந்த நபர் Ola S1 Pro ரக எலக்ட்ரிக் பைக்கை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். அவர் சம்பவத்தன்று தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வரும்போது திடீரென பைக்கின் முன்பகுதி பார்ட் பார்ட்டாக கழண்டு சாலையில் விழுந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மீண்டு வந்துள்ளார்.

இதையடுத்து, அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த பைக் ஓலா நிறுவனத்தின் ஷோரூமுக்கு எடுத்து செல்லப்பட்டு பழுது நீக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிகழ்வை அந்த நபர் சமூக வலைதளத்தில் வெளியிடவே, இது வைரலாகியுள்ளது. பலரும் ஓலா நிறுவனத்தை இது தொடர்பாக விமர்சித்து வந்த நிலையில், சில எலக்ட்ரிக் பைக்குகளில் மட்டுமே இது போன்ற பிரச்சனை இருப்பதாக ஓலா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.