fbpx

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய வேண்டுமா…? செப் 8-ம் தேதி கடைசி நாள்…!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நடைபெற்ற ஏப்ரல் 2023 , பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களில் தேர்வர்களின் பெயர் ( தமிழ் / ஆங்கிலம் ) , தாய் மற்றும் தந்தை பெயர் ( தமிழ் / ஆங்கிலம் ), பிறந்த தேதி , புகைப்படம் , பள்ளியின் பெயர் ( தமிழ் / ஆங்கிலம் ) ஆகியவற்றில் திருத்தங்கள் கோரி பெறப்படும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வர்களின் பத்தாம் வகுப்பு மாற்றுச்சான்றிதழ்களுடன் இணைத்து பள்ளித்தலைமை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களில் செப்டம்பர் 8-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

அவ்வாறு திருத்தங்கள் கோரி பெறப்படும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் 09.09.2023 முதல் 22.09.2023 வரையிலான நாட்களில் தங்களுக்கான USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி www.dge.tn.gov.in என்ற இவ்வலுவலக இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் , தனித்தேர்வர்களிடமிருந்து திருத்தங்கள் கோரி பெறப்படும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இந்தியாவில் வரும் டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும்..! மம்தா பானர்ஜி…

Tue Aug 29 , 2023
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு(2024-ல்) நடைபெற உள்ளது. ஆனால் இந்த தேர்தலை முன்கூட்டியே அதாவது இந்த ஆண்டு இறுதியிலேயே நடத்த மத்தியில் ஆளும் பாஜக அரசு திட்டமிட்டிருப்பதாக மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ்கட்சியின் இளைஞரணி பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது, மத்தியில் பாஜக அரசு 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால், […]

You May Like