fbpx

பிசிசிஐ மீடியா உரிமைக்கான ஏலத்தில் எந்தெந்த நிறுவனம் போட்டி போடுகிறது??

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது கடைசியாக மீடியா உரிமைக்கான 2023 முதல் 2027 ஆம் ஆண்டிற்கான டெண்டரை நிர்ணயித்துள்ளது. இந்த டெண்டரானது கடந்த 25ஆம் தேதி வெளியானது. இதனை, இந்திய வாரியத்தின் பங்குதாரரான எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனம் வெளியிட்டது.

அதன்படி வரும் 19 ஆம் தேதிக்குள்ளாக மீடியா உரிமைக்கான ஒப்பந்த நிறுவனத்தை நிர்ணயிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த புதிய ஒப்பந்தமானது 5 ஆண்டு காலத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனமானது வரும் 2028 ஆம் ஆண்டு வரையில் இரு தரப்பு போட்டி மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமையை பெறும்.

இந்த டெண்டருக்கான ஏலத்தில் போட்டி போடும் மீடியா நிறுவனங்கள் என்னென்ன என்று பார்த்தால் வழக்கம் போல் டிஸ்னி ஸ்டார், வையாகாம் 18, சோனிஆகியவை அடங்கும். இந்த நிறுவங்கள் தவிர ஜீ மற்றும் ஃபேன் கோடு ஆகியவை டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைக்கான போட்டியில் இந்த நிறுவனங்களுடன் இணைந்து 5 ஆண்டுகாலத்திற்கு போட்டி போடுகின்றன.

ஏற்கனவே இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டி ஆகியவை எந்த தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகள் ஃபேன்கோடு ஆப்பில் தான் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

பிசிசிஐ ஊடக உரிமைக்கான டெண்டரின் சிறப்பம்சங்கள், புதிய ஒப்பந்தம் ஐபிஎல் போட்டியைப் போலவே 5 ஆண்டுகளுக்கு இருக்கும். டிஜிட்டல் மற்றும் டிவி உரிமைகள் இரண்டும் தனித்தனியாக இருக்கும். மூடிய ஏல முறைக்கு பதிலாக மின்-ஏலம் நடைபெற வாய்ப்புள்ளது. ஐபிஎல் மீடியா உரிமை விற்பனை மூலம் பிசிசிஐக்கு ரூ.48,390 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் டிவி உரிமையும் டிஜிட்டல் உரிமையும் தனித்தனியாக இருந்தது. புதிய ஒப்பந்தத்தின் கீழ் வரும் போட்டிகளின் சரியான எண்ணிக்கை இன்னும் விவாதத்தில் உள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் 100 இருதரப்பு போட்டிகள் இடம்பெறும் என்று தெரிகிறது. புதிய சுழற்சியில், அதிக எண்ணிக்கையிலான டி20 போட்டிகள் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான ஒருநாள் போட்டிகள் இருக்கும், ஏனெனில் ஒருநாள் போட்டிகளில் ரசிகர்களிடையில் ஆர்வம் குறைவாக உள்ளது. டிஸ்னி-ஸ்டார் கடந்த முறை 103 போட்டிகளுக்கு ரூ.6138.10 கோடி செலுத்தியது. இது ஒரு போட்டியின் மதிப்பீடாக 61 கோடி ரூபாய் ஆனது. இருப்பினும், உரிமைகள் தனித்தனியாக இருக்கும் என்பதால், பிசிசிஐ ரூ. 12,000 கோடிக்கு மேல் எதிர்பார்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Maha

Next Post

4 தேசிய விருது வென்ற கலை இயக்குனர் தற்கொலை..கடன் பிரச்னையா??

Wed Aug 2 , 2023
தேவதாஸ்’, ‘ஜோதா அக்பர்’ மற்றும் ‘லகான்’ உள்பட ஏராளமான வெற்றி படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றியவர் நிதின் தேசாய் (வயது 57). இவர் கலை இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருதை நான்கு முறை பெற்றிருக்கிறார். இவர் கடந்த ஆண்டில் சந்திரகாந்த் புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தேஷ் தேவி என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளாராக உருவெடுத்தார். இதையடுத்து நிதின் தேசாய் மும்பையில் உள்ள அவரது என். டி. ஸ்டுடியோவில் […]

You May Like