தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் 81.40% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உட்பட நாடு முழுவதும் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் ஆர்வமாக தங்களது வாக்குகளை செலுத்தினர்.
தமிழகம் (39), ராஜஸ்தான் (12), உத்தரப் பிரதேசம் (8), மத்தியப் பிரதேசம் (6), உத்தராகண்ட் (5), அருணாச்சலப் பிரதேசம் (2), மேகாலயா (2), அந்தமான் அண்ட் நிகோபார் தீவுகள் (1), மிசோரம் (1), நாகாலாந்து (1), புதுச்சேரி (1), சிக்கிம் (1), லட்சத்தீவு (1), அசாம் (5), மகராஷ்டிரா (5), பிஹார் (4), மேற்குவங்கம் (3), மணிப்பூர் (2), திரிபுரா (1), ஜம்மு காஷ்மீர் (1), சத்தீஸ்கர் (1) தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
44 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையின் 3 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் 81.40% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 75.35 % வாக்குப்பதிவாகி உள்ளது. திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் 67.53% வாக்குகள் பதிவாகி உள்ளன. திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் 68.26% வாக்குகள் பதிவாகியுள்ளன.